கோவை சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் கத்தி போடும் திருவிழா: ரத்தம் சொட்டச் சொட்ட அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்..!

டவுன்ஹால் பகுதியில் உள்ள புகழ்பெற்ற சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் விஜயதசமியை முன்னிட்டு நடைபெறும் கத்தி போடும் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ரத்தம் சொட்ட சொட்ட கத்தி போட்டு அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.



கோவை: டவுன்ஹால் பகுதியில் உள்ள புகழ்பெற்ற சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் கத்தி போடும் திருவிழாவில், ஏராளமான தேவாங்க செட்டியார் சமூகத்தை சேர்ந்த பக்தர்கள் கலந்துக்கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கோவையில் டவுன்ஹால் அருகே ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும், விஜய் தெசமே முன்னிட்டு



இக்கோவிலில் பாரம்பரியமான கத்தி போடும் திருவிழா நடைபெறுவது வழக்கம்.



இத்திருவிழாவில், ஆயிரக்கணக்கான ஆண் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு கத்தி போட்டு வழிபாடு செய்வர்.



ஒவ்வொரு ஆண்டும் இந்த கத்தி போடும் நிகழ்வானது பூ மார்க்கெட் பகுதியில் உள்ள மாகாளியம்மன் கோவிலில் இருந்து புறப்படும் ஊர்வலம், டவுன்ஹால் பகுதியில் உள்ள சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் வந்தடையும்.



இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக, "வேஸ்க்கோ தள்ளி, தீசுக்கோ தள்ளி" என்ற இன்ற முழக்கங்களை எழுப்பி, கத்தியால் கை மற்றும் மார்பு பகுதிகளில் வெட்டிக் கொண்டே ஊர்வலமாக செல்வர்.



உடலில் ரத்தம் வழிந்தோடிய நிலையில், அந்த வெட்டுக் காயங்களின் மீது திருமஞ்சனப் பொடியை வைத்துக் கொண்டு, ஆடிக்கொண்டே பக்தர்கள் சென்றது காண்போரை பரவசத்தில் ஆழ்த்தியது. இந்தப் திருமஞ்சன பொடியை வைத்தால் மூன்று நாட்களில் காயம் சரியாகிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.



ஊர்வலம் சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் முடிவடைந்ததை அடுத்து, அம்மனுக்கு விசேஷ பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடத்தப்பட்டு அம்மன் திருக்கல்யாணமும் நடைபெற்றது.

இந்த திருவிழாவில், தேவாங்க செட்டியார் சமூகத்தை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...