விஜயதசமி: கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி; நூற்றுக்கணக்கான குழந்தைகள் பங்கேற்பு..!

வித்யாரம்பம் நிகழ்ச்சியை முன்னிட்டு கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் பெற்றோர்கள் குழந்தைகளை அழைத்து வந்து வித்யாரம்பம் என்ற எழுத்து அறிவித்தல் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.



கோவை: நவராத்திரியின் நிறைவு நாளான விஜயதசமி இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில், கல்வி, கலைகள் என எது தொடங்கினாலும் வெற்றியுடன் முடியும் என்பது நம்பிக்கை. இதனால் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும் பாட்டு, இசைக்கருவிகள், நடனம் ஆகிய பயிற்சிகள், பிறமொழி பயிற்சி, புதிதாக ஒரு தொழிலை கற்றுக்கொள்வது ஆகியவற்றை இந்த நாளில் தொடங்குவது வழக்கம்.

இதற்காக குழந்தைகளுக்கு வித்யாரம்பம் என்னும் எழுத்து அறிவித்தல் நிகழ்ச்சி ஆண்டுதோறும் அய்யப்பன் கோவில்களில் நடைபெறும். அதன்படி, கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் இந்த நிகழ்ச்சி இன்று சிறப்பாக நடைபெற்று வருகிறது.

ஆண்டுதோறும் சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் விஜயதசமி அன்று இந்த நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல், இந்தாண்டும் விஜயதசமியை முன்னிட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.



குழந்தைகளின் விரலை பிடித்து "ஹரி ஸ்ரீ கணபதியே நமஹா" என எழுதியும் பச்சரியில் "ஓம்" என்றும் "அம்மா" "அப்பா" என்றும் விரல் பிடித்து குழந்தைகளை பெற்றோர்கள் எழுத வைத்தனர்.



விஜயதசமி தினத்தன்று குழந்தைகள் கல்வியை துவங்கினால் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது நம்பிக்கை.



அதனடிப்படையில் கோயில்களில் விஜயசதமி முன்னிட்டு வழிபாடுகளுடன் குழந்தைகளின் கல்வி கற்றலை தொடங்கியுள்ளதாக, பெற்றோர்கள் தெரிவித்தனர்.

விஜயதசமி முன்னிட்டு இன்று சித்தாபுதூர் ஐயப்பன் கோவில் உட்பட பல்வேறு கோவில்களில் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...