சிங்கப்பூரிலிருந்து கோவைக்கு தங்கம் கடத்தி வந்த இரு வேறு நபர்களை கோவை வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் சோதனை செய்ததில், 5.7 கிலோ தங்க ஆபரணங்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. நகைகளை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.
கோவை: வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் நூதன முறையில் தங்கம் கடத்தப்பட்டு வரும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது என்பது ஒரு புறம் இருந்தாலும், விமான நிலையங்களில் கடைபிடிக்கப்படும் தீவிர கண்காணிப்பு
நடவடிக்கைகளினால் தங்கம் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களை கடத்தி வரும் நபர்கள் கையும் களவுமாக பிடிபட்டும் வருகின்றனர்.
இதே போன்ற ஒரு சம்பவத்தில் சிங்கப்பூரிலிருந்து கோவைக்கு தங்கம் கடத்தி வந்த இரு நபர்கள் விமான நிலையத்தில் கையும் களவுமாக பிடிபட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 5.7 கிலோ தங்க ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இன்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு வந்த 6 பயணிகளை கோவை வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது செயின்கள் மற்றும் வளையல்களை பேண்ட் பாக்கெட்டுகளில் கடத்தி வந்ததுகண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடமிருந்து தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சென்னையை சேர்ந்த முகமது அப்சல்
(32) என்ற பயணி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். ஜாமீனில் வெளிவர முடியாத வழக்கின்கீழ் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.
இதே போன்று, திருச்சியைச் சேர்ந்த மற்றொரு பயணி கிருஷ்ணன் (வயது 66), இவரிடம் இருந்துகைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு 50 லட்சத்துக்கும் அதிகமாகவும் ஒரு கோடிக்கும் குறைவாகவும் இருப்பதனால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
எஞ்சிய நான்கு பயணிகளும் அதிகாரிகளால் விடுவிக்கப்பட்டனர். இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.