அனுமதியின்றி கோழி கழிவுகளை கொட்டும் வாகனத்தை பிடித்து தந்தால் ரூ.1000 பரிசு - பெள்ளேபாளையம் ஊராட்சி அறிவிப்பு..!

மேட்டுப்பாளையம் அருகே உள்ள பெள்ளேபாளையம் ஊராட்சியில் உள்ள குடியிருப்பு மற்றும் சாலையோரங்களில் அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அனுமதியின்றி கோழி கழிவுகளை கொட்டிவிட்டு செல்லும் நிலையில் அந்த வாகனத்தை பிடித்து கொடுத்தால் ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என கிராம சபை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.


கோவை: மேட்டுப்பாளையம் அடுத்த பெள்ளேபாளையம் ஊராட்சியில் அனுமதியின்றி கோழி கழிவுகளை கொட்டிவிட்டு செல்லும், வாகனத்தை பிடித்து கொடுப்பவர்களுக்கு ரூ.1,000 பரிசாக வழங்கப்படும் என கிராம சபை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 17 ஊராட்சிகளில் காந்திஜெயந்தி தினத்தையொட்டி கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன.

இதன் ஒரு பகுதியாக மேட்டுப்பாளையம் அருகேயுள்ள பெள்ளேபாளையம் பகுதியில் ஊராட்சி தலைவர் சிவக்குமார் தலைமையில், கிராம சபை கூட்டம் நடைபெற்றது. காரமடை வட்டார வளர்ச்சி அலுவலர் கோபால் முன்னிலை வகித்தார்.

இந்த கூட்டத்தில், ஊராட்சிக்குட்பட்ட குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலையோரத்தில் கோழி கழிவுகளை கொட்டிவிட்டு செல்லும் வாகனங்களை பிடித்து கொடுப்பவர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

மேலும் தூய்மை பணியாளர்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் குப்பைகளை தரம்பிரித்து வாங்க வேண்டும்.

பிளாஸ்டிக் கழிவுகள் கிலோ ரூ.8-க்கு விலை கொடுத்து ஊராட்சி நிர்வாகம் வாங்கப்படும். அந்த தொகை தூய்மை பணியாளர்களுக்கு ஊதியமாக வழங்கப்படும்.

வேளாண் துறை அதிகாரிகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் விதைகள் மலட்டு தன்மையாக உள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டால் அதற்கு மாற்று வழி சொல்ல தெரியாமல் களத்திற்கு வரும் வேளாண்மை அதிகாரிகள் தவிக்கின்றனர்.

ரேஷன் கடைகளில் பணியாளர்கள் பொதுமக்களுக்கு தரமான பொருட்களை வழங்க வேண்டும். மேலும் பொதுமக்கள் யாரும் ரேஷன் அரிசியை விற்பனை செய்ய கூடாது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதேபோல் சிக்காரம்பாளையம் ஊராட்சியில் தலைவர் ஞானசேகரன், இலுப்பநத்தத்தில் ரங்கசாமி, பெள்ளாதியில் சிவக்குமார் ஆகியோர் தலைமையில் கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றன.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...