காந்தி ஜெயந்தியன்று தடையை மீறி மதுபானம் விற்பனை - 36 பேர் கைது

காந்தி ஜெயந்தியன்று மதுபான கடைகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், இதனை பயன்படுத்தி மதுபானங்களை பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்த 36 பேரை போலீசார் கைது செய்தனர்.



கோவை: காந்தி ஜெயந்தியன்று தடையை மீறி மதுபானங்களை அதிக விலைக்கு விற்பனை செய்த 36 பேரை மதுவிலக்கு அமலாக்க துறை போலீசார் கைது செய்துள்ளனர்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் மதுக்கடைகளுக்கு கடந்த அக்டோபர் 2ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

இதனை பயன்படுத்தி சிலா் சட்டவிரோதமாக மது பாட்டில்களைப் பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் அடிப்படையில், பீளமேடு, போத்தனூா், சிங்காநல்லூா், சரவணம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், மதுவிலக்கு அமலாக்க துறை மற்றும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

இந்த சோதனையில், தடையை மீறி மாநகரில் மதுபானங்களை விற்பனை செய்த 16 பேரும், புறநகரில் 20 பேரையும் என மொத்தம் 36 பேரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 734 மது பாட்டில்கள், மற்றும் பணம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...