கோவை அருகே லாரி மோதியதில் சாலையோரத்தில் நடந்து சென்ற கூலி தொழிலாளி உயிரிழந்த சோகம்

கோவை - பொள்ளாச்சி சாலையில் சென்ற லாரி, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நடந்து சென்ற ஆறுமுகம் என்பவர் மீது மோதியதில் அவர் உயிரிழந்த நிலையில், போலீசார், லாரி ஓட்டுனர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை - பொள்ளாச்சி சாலையில் சென்ற லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் சாலையோரம் நடந்து சென்ற கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் உள்ள குழிக்காடு தோட்டத்து சாலையை சேர்ந்தவர் ஆறுமுகம்(32). கூலி தொழிலாளியான இவர் கோவை - பொள்ளாச்சி ரோட்டில் உள்ள மயிலேறிபாளையம் பிரிவில் நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு லாரி, இவர் மீது எதிர்பாராத விதமாக மோதியுள்ளது.

இதில் படுகாயமடைந்த ஆறுமுகத்தை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில், அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் கொண்டு வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக அவரது மனைவி சிவகாமி, செட்டிபாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த ஆய்வாளர் மாதையன் விசாரணை மேற்கொண்டார்.

இதனையடுத்து, விபத்து ஏற்படுத்திய லாரியை ஓட்டி வந்த தேனி மாவட்டம், கம்பத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுனர் குணசேகரன் (42) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாலையோரத்தில் நடந்து சென்ற நபர் மீது லாரி மோதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...