நல்லட்டிபாளையம் பகுதியில் ரூ.6 கோடி மதிப்பிலான நிலத்தை உள்ளூர் அரசியல்வாதிகளுடன் சேர்ந்து சிலர் அபகரித்துள்ளதாகவும், அதனை மீட்டுத் தரக்கோரி ஓய்வுபெற்ற தனியார் நிறுவன அதிகாரி, மேற்கு மண்டல எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
கோவை: நல்லட்டி பாளையம் பகுதியில் 6 கோடி ரூபாய் மதிப்பிலான 4 ஏக்கர் நிலத்தை சிலர் அபகரித்துள்ளதாக கூறி மேற்கு மண்டல எஸ்.பி அலுவலகத்தில் ஓய்வு பெற்ற தனியார் நிறுவன அதிகாரி ஒருவர் புகார் அளித்துள்ளார்.
கோவை ராம்நகர் பகுதியை சேர்ந்தவர் ரகோத்தமன். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கு நல்லட்டிபாளையம் பகுதியில் சொந்தமான ஆறு கோடி ரூபாய் மதிப்புள்ள நான்கு ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை, 2 ஆண்டுகளுக்கு முன்பு, உள்ளூர் அரசியல் வாதிகளுடன் சேர்ந்து சிலர் அபகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இதுதொடர்பாக கோவை மேற்கு மண்டல காவல் துறை தலைவர் அலுவலகத்தில் ரகோத்தமன் புகார் மனு அளித்துள்ளார். இதனையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது, 2 வருடங்களுக்கு முன்பு நிலத்தை பிரித்து விற்பனை செய்ய ரூ.28லட்சம் கடனாக பெற்றேன்.
இதற்கு அடமானமாக அசல் பத்திரங்களை வாங்கிய சில நாட்களிலேயே பத்திரம் வேறோருவர் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதை அறிந்து தாம் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தேன்.
இதுகுறித்து பலமுறை காவல்துறை, முதல்வர் தனி பிரிவு, உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் என பலரிடம் தெரிவித்தும் கடந்த 2 ஆண்டுகளாக அலைகழிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
எஸ்.பி அலுவலகத்தில் மனு அளிக்க வந்த போது, ரகோத்தமனுடன் அகில பாரத மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் எஸ் ராமநாதன், மாவட்ட தலைவர் இளந்தென்றல் சிவா, துணை தலைவர் சேகர், பூசாரிகள் சங்க தலைவர் பூபதி ராஜ், வடவள்ளி மண்டல நிர்வாகிகள் வினோத் நவீன் ஸ்ரீராம் மற்றும் தென்னிந்திய ஃபார்வேர்டு பிளாக் கட்சி மாநில நிர்வாகிகள் மாரி மறவன், ஐயர்தேவர், விக்கி ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.