பி.எஃப்.ஐ அமைப்பின் அலுவலகங்களுக்கு சீல்வைத்து, கொடி கம்பங்கள் மற்றும் பிளக்ஸ் போர்டுகளை அகற்றக்கோரி ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கோவை: மத்திய அரசால் தடை செய்யப்பட்ட பி.எஃப்.ஐ அமைப்பின் அலுவலகங்களுக்கு சீல்வைத்து, கொடி கம்பங்கள் மற்றும் பிளக்ஸ் போர்டுகளை அகற்றக்கோரி ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் அளிக்கப்பட்டுள்ள புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இந்தியா முழுவதும் சட்ட விரோதமான செயல்களிலும், இந்திய தேசத்துக்கு எதிராகவும், பயங்கரவாத செயல்களிலும், தீவிரவாத செயல்களிலும், இந்தியா முழுவதும் மத ரீதியாக பல்வேறு படுகொலைகளை செய்தும், பயங்கரவாத அமைப்புககுக்கு நிதி திரட்டுவது,
சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு மற்றும் பிரதமரை கொலை செய்வதற்கு திட்டமிட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மற்றும் அதன் துணை அமைப்புகளையும் மத்திய அரசு 5 ஆண்டுகள் தடை செய்து உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசும் இது சம்பந்தமாக அரசாணையும் வெளியிட்டுள்ளது. அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்ககுக்கும் காவல்துறை அதிகாரிககுக்கும் தமிழக தலைமை செயலாளர் அவர்களுக்கும் உள்துறை செயலாளர் அவர்களும்ம் அறிக்கை அனுப்பினார்.
இது சம்பந்தமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் பி.எஃப்.ஐ அமைப்புகளின் அலுவலகங்கள் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டு வருகிறது. அதே போல கோவை மாவட்டத்திலும் மேற்கண்ட அமைப்புகளின் அலுவலகங்ககும், கொடிக் கம்பங்கும், பிளக்ஸ் போர்டுகளும் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.
இதையெல்லாம் அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்கள். தடை செய்யப்பட்ட பி.எஃப்.ஐ அமைப்பினுடைய எந்த செயல்பாட்டுக்கும் அனுமதி அளிக்கக் கூடாது. ஆகவே இந்திய அரசியமைப்பு சட்டப்படி தமிழக அரசினுடைய அரசாணைப்படி, உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடை செய்யப்பட்ட பி.எஃப்.ஐ அமைப்பு சம்பந்தப்பட்ட கொடிக் கம்பங்களையும், போர்டுகளையும் அகற்றுவதற்கும் அலுவலகங்ககுக்கு சீல் வைப்பதற்கு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.