தடை செய்யப்பட்ட பி.எஃப்.ஐ அமைப்பின் கொடிகள், பிளக்ஸ்களை அகற்ற வேண்டும் - ஆட்சியர், காவல் ஆணையர், எஸ்.பி-யிடம் ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கம் மனு

பி.எஃப்.ஐ அமைப்பின் அலுவலகங்களுக்கு சீல்வைத்து, கொடி கம்பங்கள் மற்றும் பிளக்ஸ் போர்டுகளை அகற்றக்கோரி ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.



கோவை: மத்திய அரசால் தடை செய்யப்பட்ட பி.எஃப்.ஐ அமைப்பின் அலுவலகங்களுக்கு சீல்வைத்து, கொடி கம்பங்கள் மற்றும் பிளக்ஸ் போர்டுகளை அகற்றக்கோரி ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் அளிக்கப்பட்டுள்ள புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இந்தியா முழுவதும்‌ சட்ட விரோதமான செயல்களிலும்‌, இந்திய தேசத்துக்கு எதிராகவும்‌, பயங்கரவாத செயல்களிலும்‌, தீவிரவாத செயல்களிலும்‌, இந்தியா முழுவதும்‌ மத ரீதியாக பல்வேறு படுகொலைகளை செய்தும்‌, பயங்கரவாத அமைப்புககுக்கு நிதி திரட்டுவது,

சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்‌.ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன்‌ தொடர்பு மற்றும் பிரதமரை கொலை செய்வதற்கு திட்டமிட்ட பாப்புலர்‌ ஃப்ரண்ட்‌ ஆப்‌ இந்தியா அமைப்பு மற்றும் அதன்‌ துணை அமைப்புகளையும்‌ மத்திய அரசு 5 ஆண்டுகள்‌ தடை செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசும்‌ இது சம்பந்தமாக அரசாணையும் வெளியிட்டுள்ளது. அனைத்து மாவட்ட ஆட்சித்‌ தலைவர்ககுக்கும்‌ காவல்துறை அதிகாரிககுக்கும்‌ தமிழக தலைமை செயலாளர்‌ அவர்களுக்கும்‌ உள்துறை செயலாளர்‌ அவர்களும்ம்‌ அறிக்கை அனுப்பினார்.

இது சம்பந்தமாக தமிழகத்தில்‌ சில மாவட்டங்களில்‌ பி.எஃப்.ஐ அமைப்புகளின்‌ அலுவலகங்கள் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளால்‌ சீல்‌ வைக்கப்பட்டு வருகிறது. அதே போல கோவை மாவட்டத்திலும்‌ மேற்கண்ட அமைப்புகளின்‌ அலுவலகங்ககும்‌, கொடிக்‌ கம்பங்கும்‌, பிளக்ஸ் போர்டுகளும்‌ பல இடங்களில்‌ வைக்கப்பட்டுள்ளது.

இதையெல்லாம்‌ அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள்‌ இதுவரை நடவடிக்கை எடுக்காமல்‌ இருக்கிறார்கள். தடை செய்யப்பட்ட பி.எஃப்.ஐ அமைப்பினுடைய எந்த செயல்பாட்டுக்கும்‌ அனுமதி அளிக்கக் கூடாது. ஆகவே இந்திய அரசியமைப்பு சட்டப்படி தமிழக அரசினுடைய அரசாணைப்படி, உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள்‌ தடை செய்யப்பட்ட பி.எஃப்.ஐ அமைப்பு சம்பந்தப்பட்ட கொடிக் கம்பங்களையும்‌, போர்டுகளையும்‌ அகற்றுவதற்கும்‌ அலுவலகங்ககுக்கு சீல்‌ வைப்பதற்கு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...