கோவை மசக்காளிபாளையத்தில் டாஸ்மாக் ஊழியர் சங்க மாநில மாநாடு - பணி வரன்முறை, காலமுறை ஊதியம் வழங்க கோரிக்கை.

மசக்காளிபாளையம் அருகே நடைபெற்ற டாஸ்மாக் ஊழியர்களுக்கான மாநில மாநாட்டில், ஊழியர்களுக்கு சட்டப்படியான பணி வரன்முறை மற்றும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


கோவை: டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணி வரன்முறை மற்றும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என மசக்காளிபாளையம் அருகே நடைபெற்ற டாஸ்மாக் ஊழியர்கள் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

மசக்காளி பாளையம் சாலையில் உள்ள ஹர்சா மஹாலில் டாஸ்மாக் ஊழியர்களுக்கான மாநில மாநாடு நேற்று தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும்

இந்த மாநாட்டில், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகளில் 19 ஆண்டுகளுக்கு மேலாக பணி புரியும் ஊழியர்களுக்கு சட்டப்படியான பணிவரன்முறை மற்றும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

சமூக விரோதிகளிடம் இருந்து ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மாநாடு நடைபெறுகிறது.



மாநாட்டின் முதல் நாள் நிகழ்வாக மசக்காளி பாளையத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாநாட்டிற்கு வரவேற்புக்குழு தலைவர் எஸ்.மூர்த்தி தலைமை தாங்கினார். சங்கத்தின் மாவட்ட பொதுச்செயலாளரும், வரவேற்புக்குழு தலைவைருமான ஏ.ஜான் அந்தோணிராஜ் வரவேற்பு உரையாற்றினார்.

மேலும் இந்த நிகழ்வில் மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், சிஐடியு மாநில துணை தலைவர் இ.பொன்முடி, டாஸ்மாக் சம்மேளன தலைவர் கே.பழனிவேலு, பொதுச்செயலாளர் கே.திருச்செல்வன், பொருளாளர் ஜி.சதீஸ், சிபிஎம் மாவட்ட செயலாளர் சி.பத்மநாபன், சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் ஆர்.வேலுசாமி உள்ளிட்டோர் உரையாற்றினர்.

நிறைவாக வரவேற்புக்குழு பொருளாளர் எஸ்.ராமகிருஷ்ணன் நன்றி கூறினார். தொடர்ந்து இன்று நடைபெறும் மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் மற்றும் எதிர்கால இயக்க நடவடிக்கைகள் மாநாட்டில் திட்டமிடப்பட்டுள்ளது.

மாநாட்டில் பங்கேற்பதற்காக மாநிலம் முழுவதும் இருந்து இருநூறுக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...