கோவையில் களைகட்டியது ஆயுத பூஜை..! பூக்கள் விலை கிடுகிடு உயர்வு

ஆயுத பூஜையை முன்னிட்டு கோவை பூ மார்க்கெட் விழாக்காலம் பூண்டுள்ளது. தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளுக்கு பூக்கள் மட்டும் பூஜை பொருட்கள் வாங்க மக்கள் குவிந்து வருகின்றனர். அதன்படி, மல்லிகை, தாமரை பூ, அரளி போன்ற பூக்களின் விலை கிடிகிடுவன உயர்ந்துள்ளது.


கோவை: நாளை கொண்டாடப்பட உள்ள ஆயுத பூஜையை முன்னிட்டு, கோவை பூ மார்க்கெட் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளுக்கு மொத்தமாகவும் சில்லரையாகவும் பூக்களை வாங்க மக்கள் குவிந்ததால் அப்பகுதி முழுவதும் திருவிழாக்காலம் பூண்டது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றால் கலை இழந்து காணப்பட்ட ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை திருவிழாக்களை இவ்வாண்டு கோலாகலமாக கொண்டாட பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அதன்படி, பூஜைக்கு தேவையான பொருட்களான பொரி, பூ, ஊதுபத்தி, வாழை இலை, வாழை தோரணங்கள், தொழிற்சாலைகளை அலங்காரப்படுத்த கலர் பேப்பர்கள், போன்ற பல்வேறு பொருட்களை வாங்க கோவை பூ மார்க்கெட் பகுதியில் மக்கள் குவிந்து வருகின்றனர்.

நவராத்திரி விழாவை முன்னிட்டு கடந்த இரண்டு வாரங்களாகவே பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்ட நிலையில், நாளை கொண்டாடப்பட உள்ள ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்களின் விலை ரூபாய் ஆயிரம் வரை விற்கப்பட்டு வருகிறது.

அதன்படி மல்லி ஒரு கிலோ ரூ.800 முதல் 1000 வரை விற்பனையானது. ஜாதி மல்லி ரூ.600, செவ்வந்தி ரூ.400, ரோஜா ஒரு கிலோ ரூ.320, அரளி ரூ.300, தாமரை ஒன்று ரூ.20, கோழிக் கொண்டை பூ ரூ.100, மருகு ஒரு கட்டு ரூ.30, மரிகொழுந்து ஒரு கட்டு ரூ.30, நந்தியா வட்டம் ரூ.200, சம்பங்கி ரூ.30, செண்டுமல்லி ரூ.100, வாடாமல்லி ரூ.100, பனை ஓலை ஒன்று ரூ.5, வாழை குலை ஒன்று ரூ.20, எலுமிச்சை ஒரு கிலோ ரூ.160- ஆக அதிகரித்து இருந்தது.

அதேபோன்று வெள்ளை பூசனி ஒரு கிலோ ரூ.40, தேங்காய் ரூ.15 முதல் 30 வரையும், சாத்துகுடி ரூ.100, ஆரஞ்சு ரூ.150, மாதுளை ரூ.220, ஆப்பிள் ரூ.150, திராட்சை ரூ.120, கொய்யா ரூ.100-க்கும் விற்பனையானது.

விலை உயர்வை பொருட்படுத்தாமல் மக்கள் சில்லறையாகவும், மொத்தமாகவும் பூக்கள் மற்றும் பூஜை சாமான்களை வாங்கி செல்வதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...