பல்லடம் அருகே கவுண்டம்பாளையம் பகுதியில் விவசாயி தங்கவேல் என்பவர் அவரது மனைவி புஷ்பாவதியை கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் கவுண்டம்பாளையம் பகுதியில் விவசாயி தங்கவேலு என்பவர் அவருடைய மனைவி புஷ்பாவதி மற்றும் மகன் மதன்குமாருடன் வசித்து வருகிறார்.
விவசாயம் செய்து வந்த தங்கவேலு, விவசாயத்தை கைவிட்டு விட்டு மதுவுக்கு அடிமையானதாக தெரிகிறது. இதனால் கணவன் - மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
தங்கவேலுவின் மகன் மதன்குமார், தினமும் அதிகாலை 3 மணிக்கு பால் விற்பனைக்காக வெளியே செல்வது வழக்கம். அதே போன்று, இன்றும் பால் விற்பனை செய்ய மதன் குமார் வெளியே சென்ற பின்பு, தங்கவேல் தனது மனைவி புஷ்பாவதியின் கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டு தானும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
பொழுது விடிந்தும், தங்கவேல் வீட்டின் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் உள்ளே பார்த்துள்ளனர். அப்போது இருவரும் வீட்டினுள் சடலமாக இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து அப்பகுதி மக்கள் உடனடியாக பல்லடம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த பல்லடம் போலீசார், இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தங்கவேலு தன் மனைவியை கொலை செய்து விட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அப்படியென்றால் எதற்காக கொலை செய்தார்? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.