பல்லடம் அருகே பரபரப்பு..! மனைவியை கொன்றுவிட்டு, விவசாயி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டாரா..? - போலீசார் விசாரணை

பல்லடம் அருகே கவுண்டம்பாளையம் பகுதியில் விவசாயி தங்கவேல் என்பவர் அவரது மனைவி புஷ்பாவதியை கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் கவுண்டம்பாளையம் பகுதியில் விவசாயி தங்கவேலு என்பவர் அவருடைய மனைவி புஷ்பாவதி மற்றும் மகன் மதன்குமாருடன் வசித்து வருகிறார்.

விவசாயம் செய்து வந்த தங்கவேலு, விவசாயத்தை கைவிட்டு விட்டு மதுவுக்கு அடிமையானதாக தெரிகிறது. இதனால் கணவன் - மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

தங்கவேலுவின் மகன் மதன்குமார், தினமும் அதிகாலை 3 மணிக்கு பால் விற்பனைக்காக வெளியே செல்வது வழக்கம். அதே போன்று, இன்றும் பால் விற்பனை செய்ய மதன் குமார் வெளியே சென்ற பின்பு, தங்கவேல் தனது மனைவி புஷ்பாவதியின் கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டு தானும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

பொழுது விடிந்தும், தங்கவேல் வீட்டின் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் உள்ளே பார்த்துள்ளனர். அப்போது இருவரும் வீட்டினுள் சடலமாக இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து அப்பகுதி மக்கள் உடனடியாக பல்லடம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.



சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த பல்லடம் போலீசார், இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தங்கவேலு தன் மனைவியை கொலை செய்து விட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அப்படியென்றால் எதற்காக கொலை செய்தார்? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்‌.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...