கோவை மாநகர நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையாளராக பார்த்திபன் பொறுப்பேற்றுக் கொண்டார்

கடந்த 10 நாட்களுக்கு முன்பு கோவை மாநகர காவல்துறையின் நுண்ணறிவு பிரிவு புதிய உதவி ஆணையாளராக நியமிக்கப்பட்ட பார்த்திபன் இன்று அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார் அவருக்கு காவல்துறையினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


கோவை: கோவை மாநகர காவல்துறையின் நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையாளராக பார்த்திபன் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

கோவை மாநகர காவல்துறையின் நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையாளராக பணிபுரிந்து வந்த முருகவேல், கூடுதல் துணை

ஆணையாளராக பதவி உயர்வு பெற்றார்.

கடந்த 3 மாதங்களாக அவர் வகித்த பதிவுக்கு யாரும் நியமிக்கப்படாததால், இந்த பொறுப்புகளை கூடுதல் துணை ஆணையாளர் முருகவேல் கவனித்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு நூண்ணறிவு பிரிவு புதிய உதவி ஆணையாளராக பார்த்திபன் நியமிக்கப்பட்டார். இன்று காலையில், அவர் அதிகாரபூர்வமாக பொறுப்பேற்று கொண்டார்.

நூண்ணறிவு பிரிவின் புதிய உதவி ஆணையாளராக பொறுப்பேற்றுக்கொண்ட பார்த்திபன், இதற்கு முன் கோவை சிறப்பு நுண்ணறிவு பிரிவு (எஸ்.ஐ.சி) உதவி ஆணையாளராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாநகரில் நடக்கும் முக்கியமான நகர்வுகளை கூர்மையாக கண்காணிக்கும் மிக முக்கிய பணியில் புதிய உதவி ஆணையாளராக பொறுப்பேற்றுள்ள பார்த்திபனுக்கு காவல்துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...