கோவையில் இருந்து வியட்நாமுக்கு புதிய விமான சேவை தொடக்கம்

சிங்கப்பூருக்கு தினமும் இரவு 8.55 மணிக்கு புறப்படும் விமானம் சிங்கப்பூர் சென்றவுடன், அங்கிருந்து வியட்நாமுக்கு புறப்பட்டு செல்லும். மறுதினம் வியட்நாமில் இருந்து புறப்பட்டு சிங்கப்பூர் வந்தடைந்து, அங்கிருந்து கோவைக்கு இரவு 7.55 மணிக்கு வந்தடையும்.



கோவை: சமீபத்தில் கோவையிலிருந்து கோவாவிற்கு நேரடியாக விமான சேவை அறிமுகப்படுத்தப்பட்டது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், கோவையிலிருந்து வியட்நாமுக்கு சிங்கப்பூர் வழியாக விமான சேவையை ஸ்கூட் என்ற தனியார் விமான நிறுவனம்அறிமுகப்படுத்தியுள்ளது.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் மற்றும் ஷார்ஜாவுக்கு மட்டுமே தற்போது விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது. ஷார்ஜாவுக்கு வாரத்தில் 5 நாட்களும், சிங்கப்பூருக்கு வாரத்தில் அனைத்து நாட்களும் விமானம் இயக்கப்படுகிறது.

இந்நிலையில், கோவையில் இருந்து வியட்நாம் நாட்டின் ஹோசிமின் நகருக்கு தனியார் நிறுவனம் விமான சேவை தொடங்கியுள்ளது.

சிங்கப்பூருக்கு தினமும் இரவு 8.55 மணிக்கு புறப்படும் விமானம் சிங்கப்பூர் சென்றவுடன், அங்கிருந்து வியட்நாமுக்கு புறப்பட்டு செல்லும். மறுதினம் வியட்நாமில் இருந்து புறப்பட்டு சிங்கப்பூர் வந்தடைந்து, அங்கிருந்து கோவைக்கு இரவு 7.55 மணிக்கு வந்தடையும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய விமான சேவை மூலம் கோவை மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள தொழில் முனைவோர் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று விமான பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.



Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...