விதிகளை மீறி காரில் தேசிய கொடி, சுழல் விளக்குடன் வலம் வந்த வக்பு வாரிய தலைவர் மீது வழக்குப்பதிவு.

வக்பு பாதுகாப்பு குழு அறக்கட்டளை தலைவர் அஜ்மல் கான் என்பவர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், சென்னை வடக்கு கடற்கரை போலீசார், வக்பு வாரிய தலைவர் அப்துல் ரகுமான் மீது தேசிய கொடியை அவமதித்தது உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


சென்னை: விதிகளை மீறி காரில் தேசிய கொடி, சுழல் விளக்குடன் வலம் வந்த வக்பு வாரிய தலைவர் அப்துல் ரகுமான் மீது சென்னை வடக்கு கடற்கரை காவல்துறைவழக்குப்பதிவு செய்துள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு முதல், தமிழ்நாட்டின் வக்பு வாரிய தலைவராக இருப்பவர் அப்துல் ரகுமான். இவர், தனது வாகனத்தில் தேசிய கொடி மற்றும் நீல நிற சுழல் விளக்குடன் வலம் வந்ததாக கூறப்படுகிறது. இது சட்டப்படி குற்றமாகும்.

நாட்டின் குடியரசு தலைவர், பிரதமர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை தவிர மற்ற யாரும் சுழல் விளக்கை பயன்படுத்த கூடாது என உத்தரவு உள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் அப்துல் ரகுமான் இதனை மீறி தேசிய கொடியுடனும், நீல நிற சுழல் விளக்குடன் காரில் பயணித்து வந்துள்ளார்.

இதற்கு எதிராக தமிழ்நாடு வக்பு பாதுகாப்பு குழு அறக்கட்டளை தலைவர் எம்.அஜ்மல் கான் என்பவர், சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை தாமதம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அஜ்மல்கான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் காவல்துறையினரை விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தது. உத்தரவின் அடிப்படையில் சென்னை வடக்கு கடற்கரை போலீசார் வக்பு வாரிய தலைவர் அப்துல் ரகுமான் மீது வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர்.

அவர் மீது, தேசிய கொடியை அவமதித்தது உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...