100 அடி ரோடு மற்றும் வெரைட்டி ஹால் ரோட்டில் கடைகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: எஸ்.டி.பி.ஐ மற்றும் பி.எஃப்.ஐ அமைப்பை சேர்ந்த 4 பேர் கைது.

கோவையில் கடந்த 22ஆம் தேதி 3 வெவ்வேறு இடங்களில், பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் குண்டு வீச்சு மற்றும் பேருந்தின் கண்ணாடிகளை உடைத்த வழக்கில் எஸ்.டி.பி.ஐ மற்றும் பி.எஃப்.ஐ அமைப்பை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


கோவை: கோவையில் பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய்குண்டு வீச்சு மற்றும் பேருந்து கண்ணாடிகளை உடைத்த வழக்கில் தொடர்புடைய ஸ்.டி.பி.ஐ மற்றும் பி.எஃப்.ஐ அமைப்பை சேர்ந்த 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவையில் கடந்த 22 ஆம் தேதி இரவு பாஜக மாவட்ட அலுவலகம், 100 அடி சாலை பகுதியில் உள்ள பாஜக பிரமுகர் மோகன் என்பவரது கடை மற்றும் ஒப்பணக்காரர் வீதியில் உள்ள மாருதி செலக்சன் என்ற ஜவுளிக்கடை ஆகிய 3 இடங்களில் மண்ணெண்ணை குண்டுகள் வீசப்பட்டன.

இந்நிலையில், ஒப்பணக்காரர் வீதி ஜவுளி கடை மீது மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் விசாரணை நடத்த மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதனை தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த போலீசார், சுங்கம் சிந்தாமணி நகரை சேர்ந்த எஸ் டி பி ஐ கட்சியை சேர்ந்த அப்துல் ரகுமான் (30), என்பவரை கைது செய்தனர்.

மேலும் 100 அடி சாலையில் உள்ள பாஜக நிர்வாகி மோகனுக்கு சொந்தமான கடையில் குண்டு வீசியதாக முகமது ரஃபீக் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய துடியலூர் பகுதியை சேர்ந்த பி எஃப் ஐ அமைப்பை சேர்ந்த முஜிபுர் ரகுமான் (26) என்பவரையும் கைது செய்துள்ளனர்.

இதேபோல், கோவை என்.எச் சாலையில் சென்று கொண்டிருந்த 21ஏ எண் கொண்ட அரசு பேருந்து மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தி, கண்ணாடிகளை உடைத்த வழக்கில், உக்கடம் அன்பு நகர் பகுதியை சேர்ந்த எஸ்.டி.பி.ஐ கட்சியை சேர்ந்த ஷாஜகான் (41) என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர் பயன்படுத்திய இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

நான்கு பேரையும் கோவை மாநகர போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...