ஆனைமலை ஒன்றியத்தில் இல்லம் தேடிக் கல்வி மாதாந்திர ஆய்வுக் கூட்டம்: காலாண்டுத் தேர்வு விடுமுறையில் வாசிப்பு இயக்கம் தொடங்க முடிவு

ஆய்வுக் கூட்டத்தில் வாசிப்பு மாரத்தான் போட்டியில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட வார்த்தைகளைக் படித்த இல்லம் தேடிக் கல்வி மாணவ மாணவிகளுக்கும், அதனை வழி நடத்திய தன்னார்வலர்களுக்கும் பரிசுகளும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


கோவை: இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின், வட்டாரக் குழு மாதாந்திர ஆய்வுக்கூட்டம் இன்று ஆனைமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது.



ஆய்வுக் கூட்டத்தில் வாசிப்பு மாரத்தான் போட்டியில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட வார்த்தைகளைக் படித்த இல்லம் தேடிக் கல்வி மாணவ மாணவிகளுக்கும், அதனை வழி நடத்திய தன்னார்வலர்களுக்கும் பரிசுகளும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

கோவை அரசுப் பொருட்காட்சிப் பணியில் ஈடுபட்ட தன்னார்வலர்களுக்கும் மற்றும் கோவை புத்தக கண்காட்சியில், இல்லம் தேடிக் கல்வி அரங்கப் பணியில் பங்கேற்ற தன்னார்வலர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.



கூட்டத்தில், காலாண்டுத் தேர்வு விடுமுறை நாள்களில் குழந்தைகளுக்கு வாசிப்பு இயக்கத்தைத் தொடங்கி நடத்துதல்.



அரசால் இல்லம் தேடிக் கல்வி மையங்களுக்கு வழங்கப்பட்டுள்ள நூல்களை தினசரி வாசிக்கப் பயிற்சி தருதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானங்கள்

மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமை நடைபெறும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் தன்னார்வலர் கட்டாயம் கலந்துகொண்டு, கல்விக்குழுவுடன் மாணவர்களின் கற்றல் மேம்பாடு குறித்து கலந்துரையாடி ஆலோசனை பெற்றுச் செயல்படுத்துதல்.

மாணவர் வருகையை அதிகப்படுத்துதல். பெற்றோர் சந்திப்புக் கூட்டங்களை மையத்தில் நடத்துதல். மாணவர்களின் கல்வித் தரம் மேம்படச் செயலாற்றுதல். பள்ளிகளில் செயல்படுத்தப்படும் எண்ணும் எழுத்துத் திட்டத்தின் தொடர்ச்சியாக இல்லம் தேடி கல்வி மையங்களிலும் எண்ணும் எழுத்தும் கற்பித்தல் முறையை தொடக்க வகுப்பு மையங்களில் கடைபிடித்தல். ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



கூட்டத்தில், வட்டாரக் கல்வி அலுவலர்கள், சின்னப்பராஜ், கூடுதல் வட்டாரக்கல்வி அலுவலர் எடிசன் பெர்னார்டு, வட்டார வளமைய பொறுப்பு ஆசிரியர் பயிற்றுநர் ஜெயந்தி, ஆசிரியர் பயிற்றுநர்கள் செல்வ சரோஜினி, விசாலாட்சி, ஆசிரியர் மணிகண்டன், இல்லம் தேடிக் கல்வித் திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...