விஜயதசமி: சித்தாபுதூர் ஐயப்ப சாமி கோவிலில் அக்.5-ல் வித்யாரம்ப நிகழ்ச்சி - முன்பதிவு துவக்கம்

விஜயதசமியை முன்னிட்டு சித்தாபுதுார் ஐயப்பசுவாமி பொற்கோவிலில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி நடைபெறும் வித்யாரம்ப நிகழ்ச்சியில் பங்கேற்க பெற்றோர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு.


கோவை: விஜயதசமியை முன்னிட்டு சித்தாபுதூரில் உள்ள ஐயப்பசாமி கோவிலில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி நடைபெறவுள்ள வித்யாரம்ப நிகழ்ச்சிக்கு பெற்றோர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சித்தாபுதுார் ஐயப்பசுவாமி பொற்கோவிலில், விஜயதசமியை யொட்டி வித்யாரம்ப நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், வரும் அக்டோபர் 5ஆம் தேதி வித்யாரம்ப நிகழ்ச்சி நடைபெறுகிறது.

காலை 7:30 மணி முதல் நடைபெறவுள்ள வித்யாரம்ப நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்பும், பெற்றோர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வின் போது, குழந்தைகளுக்கு வித்யாரம்ப பூஜைக்கு தேவையான பச்சரிசி, வெற்றிலை பாக்கு, ஆண் குழந்தைகளுக்கு தேவையான சிறிய வேஷ்டி, உள்ளிட்டவை தேவஸ்தானம் சார்பில் வழங்கப்படும்.

பஜனை மண்டபத்தில் நவராத்திரி விழாவை முன்னிட்டு, தபஸ்யாமிருதம் நடனப்பள்ளி வழங்கும் நாட்டியாஞ்சலி, தேவி நாட்டியாஞ்சலி வழங்கும் நாட்டிய நாடகம் உள்ளிட்ட பல கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...