சரிவர பணிக்கு வராமல் இருந்த பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் தற்காலிக பணியிடை நீக்கம் - கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையின் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த மருத்துவர் கலைச்செல்வி சரிவர மருத்துவமனைக்கு வருவதில்லை என்ற தொடர் புகார்கள் உறுதிப்படுத்தப்பட்டதால், அவரை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.



கோவை: பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவமனை கண்காணிப்பாளராக மருத்துவர் கலைச்செல்வி பணியாற்றி வந்தார். இவர் சரிவர மருத்துவமனைக்கு வருவதில்லை எனவும் மருத்துவமனை பணிகளையும் கவனிக்காமல் உள்ளதாக, மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்துள்ளது.

இந்த நிலையில், நேற்று பொள்ளாச்சி பகுதியில் சரக்கு ஆட்டோ மற்றும் தனியார் பேருந்தும் மோதிக்கொண்ட விபத்தில், இருவர் பலியான நிலையில், பேருந்தில் பயணித்த பயணிகள் காயங்களுடன் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

அவ்வாறு சிகிச்சை பெற்று வருபவர்களை நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க கோவை மாவட்ட ஆட்சியர் ஜி எஸ் அமீரன் மருத்துவமனைக்கு சென்று இருந்தார். அப்போது, மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவமனைக்கு சரியாக வருவதில்லை என வந்த புகார்கள் குறித்து விசாரணை மேற்கொண்டதில், புகார் உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து மருத்துவமனை கண்காணிப்பாளர் கலைச்செல்வியை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சித் தலைவர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...