கோவையில் சக ஊழியரை கல்லால் தாக்கி கொலை செய்த வழக்கு: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2019 ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில் ஜெயராஜ் கைது செய்யப்பட்ட நிலையில், வழக்கு விசாரணை கோவை குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று விசாரணை நிறைவடைந்த நிலையில், குற்றவாளிக்கு ஆயுள் மற்றும் 2,500 அபராதம் விதித்து நீதிபதி பாலு தீர்ப்பளித்தார்.



கோவை: கடந்த 2019 ஆம் ஆண்டு கோவை சுல்தான்பேட்டை அடுத்த பூசாரிபாளையம் பகுதியை சேர்ந்த பொன்னுசாமி என்பவரது தோட்டத்தில் காங்கிரீட் வளையம் அமைக்கும் பணி நடைபெற்றது.

இந்த பணிக்காக மதுரையை சேர்ந்த ஶ்ரீகண்டன், ஜெயராஜ், மகுடீஸ்வரன் ஆகியோர் தோட்டத்தில் தங்கி பணியாற்றி வந்துள்ளனர்.

அப்போது, ஶ்ரீகண்டன் மற்றும் ஜெயராஜ் இருவரும் அறையில் தங்கியிருந்த போது இரவு ஜெயராஜ் ரேடியோவை சத்தமாக வைத்து பாடல் கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த ஶ்ரீகண்டன் ரேடியோவை இரும்பு கம்பியால் அடித்து உடைத்து, ஜெயராஜையும் தாக்கியுள்ளார்.

இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஜெயராஜ் கருங்கல்லை எடுத்து ஶ்ரீகண்டன் மீது போட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஜெயராஜ் கைது செய்யப்பட்ட நிலையில், வழக்கு விசாரணை கோவை குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இன்று விசாரணை நிறைவடைந்த நிலையில், ஜெயராஜ் குற்றவாளி என்றும், அவருக்கு ஆயுள் மற்றும் 2,500 அபராதம் விதித்து நீதிபதி பாலு உத்தரவிட்டார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...