உணவகத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த பைக் திருட்டு - சிசிடிவி காட்சியை கொண்டு மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு.

பல்லடம் சாலையில் தேநீர் குடிப்பதற்காக கடைக்குள் சென்றவரின் இருசக்கர வாகனத்தை மர்ம நபர் ஒருவர் போலி சாவி போட்டு திருடிச் சென்ற நிலையில், புகாரின் அடிப்படையில், போலீசார் சிசிடிவி காட்சிகளை கொண்டு குற்றவாளியை தேடி வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் அடுத்த பல்லடம் சாலையில் உணவகத்தின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூரைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவர் நேற்று காலை பல்லடம் சாலையில் தனியார் உணவகத்திற்கு தேநீர் அருந்துவதற்காக சென்றுள்ளார். அப்போது, மாரியப்பனும் அவரது நண்பரும் தனித்தனியே 2 இருசக்கர வாகனங்களில் சென்றுள்ளனர்.

இருவரும் தங்களது இருசக்கர வாகனங்களை கடைக்கு வெளியே நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளனர். அப்போது, கடையிலிருந்து வெளியே வந்த மர்ம நபர் ஒருவர், போலி சாவியை போட்டு மாரியப்பனின் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றுள்ளார்.

வெளியே வந்து பார்த்த போது, மாரியப்பன் தனது இருசக்கர வாகனம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இது தொடர்பாக, திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து, அங்கு வந்த போலீசார், அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில், மர்ம நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தை திருடிக்கொண்டு ஒரு வழி பாதையில் தப்பிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...