வஞ்சி நகர் குடிசை மாற்று வாரிய பகுதிகளில் மாணவ, மாணவிகள் மற்றும் பனியன் நிறுவன ஊழியர்கள் உள்ளிட்டோர் வசதிக்காக, இன்று முதல் இயக்கப்படவுள்ள 3 தனியார் மினி பேருந்துகளின் சேவை இன்று முதல் துவக்கி வைக்கப்பட்டது.
திருப்பூர்: வஞ்சி நகர் குடிசை மாற்று வாரிய பகுதிகளில் பேருந்து சேவை இல்லாததால் மாணவ - மாணவிகள் வசதிக்காக தனியார் பேருந்து சேவையை மாநகர துணை மேயர் மற்றும் மண்டல தலைவர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வஞ்சி நகர் குடிசை மாற்று வாரியத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இங்கிருந்து ஏராளமான பள்ளி மாணவ - மாணவிகள் திருப்பூரில் உள்ள பள்ளிக்கும், கல்லூரிக்கும் சென்று வருகின்றனர்.
அதேபோல், ஏராளமான பொதுமக்கள் பனியன் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு வேலைக்கு சென்று வருகின்றனர். இப்பகுதியில், பேருந்து வசதி இல்லாததால் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை பொதுமக்கள் நடந்து சென்று பயணிக்கும் சூழல் இருந்து வந்தது.
இதனை கருத்தில் கொண்டு மாமன்ற உறுப்பினர் அருணாச்சலம் கோரிக்கை வைத்ததையடுத்து, திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் பரிந்துரை செய்ததன் பேரில், பேருந்து சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று முதல் வஞ்சி நகர் குடிசை மாற்று வாரியத்தில் இருந்து மூன்று தனியார் மினி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனை மாநகராட்சி துணை மேயர் பாலசுப்பிரமணியம், மண்டல தலைவர் பத்மநாபன் உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர்.

இதில் ஏராளமான பள்ளி மாணவ - மாணவியர் மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் பயணித்தனர். முதல் நாள் என்பதால் இன்று அனைவருக்கும் இலவசமாக பேருந்து இயக்கப்பட்டது என்பதுகுறிப்பிடத்தக்கது.