தாமரைக்குளம் பகுதியில் செயல்பட்டு வரும் மெத்தை தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று அதிகாலை திடீரென மூலப்பொருள் வைத்திருந்த குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. மள மளவென தீ பரவியதால், அங்கு வைக்கப்பட்டிருந்த மெத்தைகள் மற்றும் மூலப் பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமானது.
கோவை: கிணத்துக்கடவு அருகே தனியார் மெத்தை தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரித்து சேதமடைந்துள்ளது.

கிணத்துக்கடவு அருகே உள்ள தாமரைக்குளம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான மெத்தை தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் சுமார் 20- க்கும் மேற்பட்டதொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இந்த தொழிற்சாலையில், புதிதாக தயாரிக்கப்பட்ட மெத்தைகள் மற்றும் மெத்தைகள் தயாரிக்க தேவையான மூலப்பொருள் வைக்கபட்டிருந்தது.
இந்நிலையில், இன்று அதிகாலைமூலப்பொருள் வைத்திருந்த குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.மள மளவென தீ பரவியதால், அங்கு வைக்கப்பட்டிருந்த மெத்தைகள் மற்றும்மூலப் பொருட்கள் அனைத்தும்எரிந்து சேதமானது.

தகவலின் பெயரில் விரைந்து வந்த பொள்ளாச்சி, கிணத்துக்கடவு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தால் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரித்து சேதமானதாக கூறப்படுகிறது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.