கிணத்துக்கடவு அருகே நெ.10 முத்தூரில் விவசாயிகளின் புகாரையடுத்து கல்குவாரிகளை கனிமவளத்துறை உதவி இயக்குனர் ஆய்வு

சாலைகள் சேதம், குவாரியில் இருந்து வெளியேறும் புகையால் விவசாய பயிர்கள் பாதிப்பு மற்றும் நிலத்தடி நீர் குறைந்து வருவதாக கனிமவளத்துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.


கோவை: கிணத்துக்கடவு அருகே நெ.10 முத்தூரில் விவசாயிகளின் புகாரையடுத்து கல்குவாரிகளை கனிமவளத்துறை உதவி இயக்குனர் இன்று ஆய்வு செய்தார்.

கிணத்துக்கடவு அருகே உள்ள நெ.10 முத்தூரில் 10க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகிறது. இந்த கல்குவாரிகளை சுற்றியுள்ள விவசாய நிலங்கள் மற்றும் வீடுகள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தனர்

இந்த புகாரையடுத்து, நெ10 முத்தூர் பகுதியில் உள்ள கல்குவாரிகளை கோவை மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர் சசிகுமார் மற்றும் கிணத்துக்கடவு வட்டாட்சியர் மல்லிகா உள்ளிட்ட வருவாய் துறையினர் நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.

விதிகளை மீறி கல்குவாரிகள் செயல்படுகிறதா? விதிகளை மீறி வெடி வைக்கபடுகிறதா? என ஆய்வு மேற்கொண்டனர்.



கல்குவாரிகளால் சாலைகள் சேதம் அடைவதோடு, குவாரியில் இருந்து வெளியேறும் புகையால் விவசாய பயிர்கள் நாசமாவதோடு நிலத்தடி நீரும் குறைந்த வருவதாக, கனிமவளத்துறை அதிகாரியிடம், விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

பின்னர், கல்குவாரி உரிமையாளர்களிடம் பேசிய கனிமவளத்துறை அதிகாரிகள் அரசு விதிமுறைகள் படி கல்குவாரியை நடத்த வேண்டும் என்று எச்சரிக்கைவிடுத்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...