கோவை வடக்கு மண்டலத்தில் 48.97 மழைநீர் வடிகால், ஆழ்குழாய்‌ கிணறு அமைக்கும் பணிகளை மேயர் துவக்கி வைத்தார்

வடக்கு மண்டலத்தில் ரூபாய் 48.97 இலட்சம்‌ மதிப்பீட்டிலான புதிதாக மழைநீர்‌ வடிகால்‌ கட்டும்‌ பணி மற்றும்‌ புதுப்பித்தல்‌ பணி, புதிய ஆழ்குழாய்‌ கிணறு அமைப்பதற்கான வளர்ச்சிப் பணிகளை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ இன்று பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.


கோவை: கோவை மாநகராட்சி வடக்கு மண்டல பகுதிகளில்‌ பல்வேறு கட்டுமான மற்றும் வளர்ச்சி பணிகளை மேயர் இன்று துவக்கம் வைத்தார்.

அதன்படி, வடக்கு மண்டலத்தில் ரூபாய் 48.97 இலட்சம்‌ மதிப்பீட்டிலான புதிதாக மழைநீர்‌ வடிகால்‌ கட்டும்‌ பணி மற்றும்‌ புதுப்பித்தல்‌ பணி, புதிய ஆழ்குழாய்‌ கிணறு அமைப்பதற்கான வளர்ச்சிப் பணிகளை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ இன்று பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

மாநகராட்சி வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.29க்குட்பட்ட அப்பநாயுடுூ வீதியில்‌ உள்ள மழை நீர் வடிகாலை நேரில்‌ ஆய்வு செய்து, மழைநீர் வடிகாலில்‌ தேங்கியுள்ள குப்பைகள்‌, செடி, கொடிகளை தூர்வாரி சுத்தம்‌ செய்து மழைநீர் தங்குதடையின்றி செல்வதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

வார்டு 29

பின்னா்‌, வார்டு எண்‌.29க்குட்பட்ட காந்தி நகர் 2வது வீதியில்‌ ரூ.4.98 லட்சம்‌ மதிப்பீட்டிலும்‌, டீச்சாஸ்‌ காலனி 3வது வீதியில்‌ ரூ.4.99 இலட்சம்‌ மதிப்பீட்டிலும்‌ புதிதாக மழைநீர்‌‌ வடிகால்கள்‌ கட்டும்‌ பணியினை துவக்கி வைத்தார்.

வார்டு 15



வார்டு எண்‌.15க்குட்பட்ட கே.என்‌.ஜி.புதார்‌, ஆறுமுகா நகா்‌ பகுதியில்‌ ரூ.7.50 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ புதிய ஆழ்குழாய்‌ கிணறு அமைக்கும்‌ ஒனுகள் துவக்கி வைப்பு.

வார்டு 14



வார்டு எண்‌.14க்குட்பட்ட வெள்ளக்கிணறு பிரிவில்‌ ரூ.7.50 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ புதிய ஆழ்குழாய்‌ கிணறு அமைக்கும்‌ பணியினையும்‌, வெள்ளக்கிணறு பிரிவு, திருவள்ளுவர்‌ நகரில்‌ ரூ.24 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ பழுதடைந்துள்ள மழைநீர் வடிகால்‌ புதுப்பித்தல்‌ பணி துவக்கம் வாய்ப்பு.

மொத்தம்‌ ரூ.48.97 லட்சம்‌ மதிப்பீட்டிலான வளர்ச்சிப் பணிகளை மேயர் கல்பனா ஆனந்தகுமார்‌ பூமி பூஜை செய்து தொடங்கி வைத்து, பணிகளை தரமாகவும் விரைவாகவும் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.



பின்னர், ரேஸ்கோர்ஸ்‌ பகுதியில்‌ வெறிநோய்‌ தடுப்பூசி முகாம்‌ மற்றும்‌ உலக வெறிநோய்‌ தினம்‌ - 2022க்கான விழிப்புணர்வு பேரணியையும், அதே போல மத்திய மண்டலம்‌ பகுதியில்‌ வெறிநோய்‌ தடுப்பூசி முகாம்‌ மற்றும்‌ சுமார்‌ 2.8 கி.மீ. தொலைவிற்கு உலக வெறிநோய்‌ தினம்‌ - 2022க்கான விழிப்புணா்வு பேரணியை மேயர் கல்பனா கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சிகளில்‌ மண்டல தலைவர் வே.கதிர்வேல்‌ (வடக்கு), மீனாலோகு (மத்தியம்‌), இலக்குமி இளஞ்செல்விகாரத்திக்‌ (கிழக்கு), பணிகள்‌ குழு தலைவர்‌, சாந்தி முருகன்‌, பொதுசுகாதாரக்‌ குழுத்தலைவர்‌ பெ.மாரிச்செல்வன்‌, மாமன்ற உறுப்பினர்கள்‌, வ.உ.சி.உயிரியல்‌ பூங்கா இயக்குனர் ஏ.செந்தில்நாதன்‌, உதவி ஆணையாரகள்‌ என பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...