பாப்பாநாயகன்புதூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளை முழுமையாக செயல்படுத்திட கோரி கோவை மாநகராட்சி மேற்கு மண்டல உதவி ஆணையரிடம் அனைத்து கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.
கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பாப்பநாயக்கன்புதூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளை முழுமையாக செயல்படுத்திட கோரி அனைத்துக் கட்சி சார்பில், மேற்கு மண்டல துணை ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சி 41-வது வார்டு பாப்பாநாயகன்புதூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளை முழுமையாக செயல்படுத்திட கோரி கோவை மாநகராட்சி மேற்கு மண்டல உதவி ஆணையரிடம் அனைத்து கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.
இதுதொடர்பாக அளிக்கப்பட்டுள்ள மனுவில்,
கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் 41வது வார்டு பாப்பநாயக்கன்புதூரில் 24 மணி நேர குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் சூயஸ் நிறுவனம் ஒரு சில பகுதிகளில் குழாய் அமைப்பு பணிகளை மேற்கொண்டு முடித்துள்ளனர். அந்த பகுதிகளில் உள்ள கீழ்காணும் குறைபாடுகளை போர்க்கால நடவடிக்கையில் மேற்கொள்ள ஆவண செய்திட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
1) மருதமலை சாலையில் முக்கிய குடிநீர் குழாய் அமைப்பு பணிகள் முடித்து நெடுஞ்சாலை துறையிடம் பணிகள் நிறைவு பெற்றதாக சூயஸ் நிறுவனம் ஆட்சேபனையின்மை சான்று (NOC) வழங்கிய பின்னரும் இணைப்புகளில் தண்ணீர் கசிவு தொடர்ந்து வருவதால் தோண்டப்பட்ட சாலையினை சரிசெய்து தார்சாலையாக மாற்ற இயலவில்லை.
2) வீதிகளில் தோண்டப்பட்ட தார்சாலைகள் பணிகள் முடிந்த பின்னர் கருங்கற்கள் சிமெண்ட் கலந்த கலவை (Wet Mix) போடப்பட்டது. மழையில் சிமெண்ட் கரைந்து கருங்கற்கள் மட்டுமே உள்ளது. ஆகவே மீணடும் Wet Mix போட்டு தார்ச்சாலையாக மாற்றம் செய்ய வேண்டும்.
3) குழாய் அமைப்பு பணிகள் நடைபெறும் போது தொடர்ச்சியாக சாக்கடை அடைப்பு ஏற்பட்டு வருகிறது. ஆகவே பணிகள் நிறைவு பெற்ற பின்னர் சூயஸ் நிறுவனத்தார் சாக்கடையை தூர்வாரி சரி செய்து கொடுக்க வேண்டும்.
4) குழாய் அமைப்பு பணிகளின் போது பாதாள சாக்கடை மற்றும் உப்பு தண்ணீர் இணைப்புகளில் ஏற்படும் உடைப்புகளை சூயஸ் நிறுவனத்தார் சரி செய்தாலும் மேற்படி இணைப்புகளில் தண்ணீர் கசிவுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதில் 41வது மாமன்ற உறுப்பினர், திமுக மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைசெயலாளர் தமிழ்மறை, பாப்பாநாயகன்புதூர் பகுதி திமுக செயலாளர் பரணி கே.பாக்யராஜ்,
41-வது வட்ட கழக பொறுப்பாளர் தம்பி(எ)சண்முகசுந்தரம், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த யாகிய ராகவன், சிவானந்த, மதிமுகவை சேர்ந்த சிவஞானம் மற்றும் சைமன் (௭) செந்தில்குமார், மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.