வார்டு எண் 41: பாப்பநாயக்கன்புதூரில்‌ 24 மணி நேர குடிநீர்‌ திட்டப்பணியை செயல்படுத்த வேண்டும் - மேற்கு மண்டல உதவி ஆணையரிடம் அனைத்து கட்சியினர் கோரிக்கை மனு

பாப்பாநாயகன்புதூரில்‌ 24 மணி நேர குடிநீர்‌ திட்டப்‌ பணிகளை முழுமையாக செயல்படுத்திட கோரி கோவை மாநகராட்சி மேற்கு மண்டல உதவி ஆணையரிடம்‌ அனைத்து கட்சி சார்பில்‌ மனு அளிக்கப்பட்டது.


கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பாப்பநாயக்கன்புதூரில்‌ 24 மணி நேர குடிநீர்‌ திட்டப்‌ பணிகளை முழுமையாக செயல்படுத்திட கோரி அனைத்துக் கட்சி சார்பில், மேற்கு மண்டல துணை ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி 41-வது வார்டு பாப்பாநாயகன்புதூரில்‌ 24 மணி நேர குடிநீர்‌ திட்டப்‌ பணிகளை முழுமையாக செயல்படுத்திட கோரி கோவை மாநகராட்சி மேற்கு மண்டல உதவி ஆணையரிடம்‌ அனைத்து கட்சி சார்பில்‌ மனு அளிக்கப்பட்டது.

இதுதொடர்பாக அளிக்கப்பட்டுள்ள மனுவில்,

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம்‌ 41வது வார்டு பாப்பநாயக்கன்புதூரில்‌ 24 மணி நேர குடிநீர்‌ வழங்கும்‌ திட்டத்தின்‌ கீழ்‌ சூயஸ்‌ நிறுவனம்‌ ஒரு சில பகுதிகளில்‌ குழாய்‌ அமைப்பு பணிகளை மேற்கொண்டு முடித்துள்ளனர்‌. அந்த பகுதிகளில்‌ உள்ள கீழ்காணும்‌ குறைபாடுகளை போர்க்கால நடவடிக்கையில்‌ மேற்கொள்ள ஆவண செய்திட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

1) மருதமலை சாலையில்‌ முக்கிய குடிநீர்‌ குழாய்‌ அமைப்பு பணிகள்‌ முடித்து நெடுஞ்சாலை துறையிடம்‌ பணிகள்‌ நிறைவு பெற்றதாக சூயஸ்‌ நிறுவனம்‌ ஆட்சேபனையின்மை சான்று (NOC) வழங்கிய பின்னரும்‌ இணைப்புகளில்‌ தண்ணீர்‌ கசிவு தொடர்ந்து வருவதால்‌ தோண்டப்பட்ட சாலையினை சரிசெய்து தார்சாலையாக மாற்ற இயலவில்லை.

2) வீதிகளில்‌ தோண்டப்பட்ட தார்சாலைகள்‌ பணிகள்‌ முடிந்த பின்னர்‌ கருங்கற்கள்‌ சிமெண்ட்‌ கலந்த கலவை (Wet Mix) போடப்பட்டது. மழையில்‌ சிமெண்ட்‌ கரைந்து கருங்கற்கள்‌ மட்டுமே உள்ளது. ஆகவே மீணடும்‌ Wet Mix போட்டு தார்ச்சாலையாக மாற்றம்‌ செய்ய வேண்டும்‌.

3) குழாய்‌ அமைப்பு பணிகள்‌ நடைபெறும்‌ போது தொடர்ச்சியாக சாக்கடை அடைப்பு ஏற்பட்டு வருகிறது. ஆகவே பணிகள்‌ நிறைவு பெற்ற பின்னர்‌ சூயஸ்‌ நிறுவனத்தார்‌ சாக்கடையை தூர்வாரி சரி செய்து கொடுக்க வேண்டும்‌.

4) குழாய்‌ அமைப்பு பணிகளின்‌ போது பாதாள சாக்கடை மற்றும்‌ உப்பு தண்ணீர்‌ இணைப்புகளில்‌ ஏற்படும்‌ உடைப்புகளை சூயஸ்‌ நிறுவனத்தார்‌ சரி செய்தாலும்‌ மேற்படி இணைப்புகளில்‌ தண்ணீர்‌ கசிவுகள்‌ தொடர்ந்த வண்ணம்‌ உள்ளது.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதில்‌ 41வது மாமன்ற உறுப்பினர், திமுக மாநில தகவல்‌ தொழில்நுட்ப பிரிவு துணைசெயலாளர்‌ தமிழ்மறை, பாப்பாநாயகன்புதூர்‌ பகுதி திமுக செயலாளர்‌ பரணி கே.பாக்யராஜ்‌,

41-வது வட்ட கழக பொறுப்பாளர்‌ தம்பி(எ)சண்முகசுந்தரம்‌, காங்கிரஸ்‌ கட்சியை சேர்ந்த யாகிய ராகவன்‌, சிவானந்த, மதிமுகவை சேர்ந்த சிவஞானம்‌ மற்றும்‌ சைமன்‌ (௭) செந்தில்குமார்‌, மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்‌.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...