கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

கடந்த 2021 ஆம் ஆண்டு, கோவை தடாகம் பகுதியில் குடிபோதையில் ஒருவரை மரக்கட்டையால் அடித்து கொலை செய்த வெள்ளிங்கிரி (52) என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.


கோவை: கோவை தடாகம் பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கோவை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

கோவை மாவட்டம் தடாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் கந்தசாமி என்பவரது மகன் வெள்ளிங்கிரி (52), என்பவர் குடிபோதையில் கடந்த 01.03.2021 -ஆம் தேதி அதே பகுதியில் வசிக்கும் ஜெயக்குமார் (25) என்பவரை மரக்கட்டையால் அடித்து கொலை செய்தார்.

இந்த குற்றத்திற்காக, தடாகம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளரால் வெள்ளிங்கிரி (52) மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கு விசாரணை கோவை மாவட்டம் கோவை குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் விசாரணை முடிவு பெற்று இன்று (28.09.2022) வெள்ளிங்கிரிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 1000/- அபராதமாக விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன் விசாரணை மேற்கொண்ட புலன் விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய நீதிமன்ற காவலர் (1158 )தமிழரசன் ஆகியோர்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் வெகுவாக பாராட்டினார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...