அமைச்சர் அன்பில் மகேஷுக்கு எச்1என்1 இன்புளுயன்சா பாதிப்பு - சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்.

காயச்சல் காரணமாக நேற்று சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ரத்த பரிசோதனையில், எச்1என்1 இன்புளுயன்சா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


சென்னை: காய்ச்சல் காரணமாகமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்குஎச்1என்1 இன்புளுயன்சா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி காய்ச்சல் காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் நேற்று (27.09.2022) அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில்சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்கள் அவருக்கு ரத்த பரிசோதனை மேற்கொண்டனர். அதில், அவருக்கு எச்1என்1 வகை இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாகஅவர் மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்செய்தியாளர்களிடம் பேசியதாவது, பருவநிலை மாற்றம் காரணமாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவருக்கு இன்யுளூயன்சா காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது, தனிமையில் சிகிச்சை பெற்று வரும் அவரது உடல்நிலை சீராக உள்ளது. விரைவில் வீடு திரும்புவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...