தமிழகத்தில் நடந்து வரும் அசம்பாவித சம்பவங்களை திருமாவளவன், சீமான் திசை திருப்ப பார்க்கிறார்கள் - தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியன்.

மேட்டுப்பாளையம் பகுதியில் பெட்ரோல் குண்டு வீச்சு மற்றும் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்ட காடேஸ்வரா சுப்ரமணியன், பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில், ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் தான் செய்திருப்பார்கள் என்று திருமாவளவனும், சீமானும் திசை திருப்ப பார்ப்பதாக குற்றம் சாட்டினார்.


கோவை: தமிழகத்தில் நிகழ்ந்து வரும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களை திருமாவளவன் மற்றும் சீமான் உள்ளிட்டோர் திசை திருப்ப பார்ப்பதாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த இந்து இளைஞர் முன்னணியின் நகர பொறுப்பாளர் ஹரிஷின் கார கண்ணாடியை மர்ம நபர்கள் உடைத்து விட்டு தப்பிச் சென்றனர். இதேபோல் மேட்டுப்பாளையத்தில் 2 இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களும் அரங்கேறின.

தாக்குதல் நடத்தப்பட்ட இடங்களில் நேரில் பார்வையிட்ட இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது,



தமிழகத்தில் நடைபெற்று வரும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களுக்கு பின்னால், பெரிய கலவரத்தை உருவாக்க முயற்சி நடைபெற்று வருகிறது. இதில் வெளிநாட்டு சதியும் உள்ளது. பெரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விசிக தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் இந்த சம்பவங்களில் இந்து முன்னணியினர், ஆர்எஸ்எஸ் அமைப்பினரே செய்துள்ளதாக அவர்கள் வழக்கை திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சரியான விசாரணை செய்யாமலேயே இந்து தான் இச்செயலில் ஈடுபட்டிருப்பார் என திசை திருப்ப பார்க்கின்றனர். போலீஸார் முறையான விசாரணை செய்யவில்லை என்றால் மிகப்பெரிய கலவரம் ஏற்படும். பயங்கரவாதிகளுக்கு சிலர் உறுதுணையாக இருக்கின்றனர். இதனை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

நீலகிரி எம்பி ஆ.ராசாவின் மேட்டுப்பாளையம் வருகை திடீரென ரத்து செய்யப்பட்டது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், ராசா வராமல் இருப்பதே நல்லது. அவர் வருவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...