தீபாவளி பண்டிகையையொட்டி கோவை கோ-ஆப்டெக்சில் 30 சதவீத சிறப்பு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ள நிலையில், கோவை நேரு ஸ்டேடிய வளாகத்தில் உள்ள கோ—ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தள்ளுபடி விற்பனையை, மாவட்ட ஆட்சியர் சமீரன் இன்று தொடங்கி வைத்தார்.
கோவை: தீபாவளி பண்டிகையையொட்டி கோவை கோ-ஆப்டெக்சில் 30 சதவீத சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியர் சமீரன் தொடங்கி வைத்தார்.
கோவை நேரு ஸ்டேடிய வளாகத்தில் தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ—ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையையொட்டி கோ-ஆப்டெக்சில் சிறப்பு தள்ளுபடியில் ஆடைகள் விற்பனை செய்யபட்டு வருகிறது.
அதன்படி இந்த ஆண்டும் தீபாவளியையொட்டி சிறப்பு விற்பனைக்காக, பட்டு, பருத்தி சேலைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், ஆடவர் அணியும் ஆயத்த சட்டைகள், ஆர்கானிக் பருத்தி சேலைகள் விற்பனைக்கு வந்துள்ளது. இதுமட்டுமல்லாமல் ஏற்றுமதி தரம் வாய்ந்த ஹோம் பர்னிசிங் ரகங்களும் விற்பனைக்கு வந்துள்ளன.
தீபாவளியையொட்டி இந்தாண்டு 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தள்ளுபடி விற்பனையை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், கோ ஆப்டெக்ஸ் நிர்வாக குழு இயக்குனர் ரமேஷ் மற்றும் தலைவர் வெங்கடாசலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆண்டு கோவை மாவட்ட கோ ஆப்டெக்ஸ் நிறுவனங்களில் ஒன்பது கோடியே 10 லட்சத்திற்கு விற்பனை குறியீடு எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.