குறிச்சி பிரிவு பகுதியில் கட்டிடம் ஒன்றில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பேனரை மாநகராட்சி ஆணையர் உத்தரவின் பேரில் அதிகாரிகள் அகற்றிவிட்டு, உரிமையாளருக்கு ரூ.5,000 அபராதமும் விதித்துள்ளனர்.
கோவை: கோவை மாநகராட்சி வார்டு எண்.94-க்கு உட்பட்ட பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பேனர்களை அகற்றிய அதிகாரிகள், உரிமையாளர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதித்துள்ளனர்.

கோவை மாநகராட்சி வார்டு எண் 94-க்கு உட்பட்ட பொள்ளாச்சி பிரதான சாலை, குறிச்சி பிரிவு பகுதியில் ஒரு கட்டிடத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பேனர்கள் (Hoardings) வைக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் உத்தரவின் பேரில், உதவி நகரமைப்பு அலுவலர் சத்யா தலைமையிலான அதிகாரிகள், சம்பவ இடத்துக்கு சென்ற குறிப்பிட்ட விளம்பர பேனரை அகற்றினர்.

இதனையடுத்து, அனுமதியின்றி விளம்பர பேனரை வைத்த உரிமையாளருக்கு, ரூ.5,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டனர்.
மேலும், கோவை மாநகராட்சியில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்றும், மீறினால் அவர்கள் மீது சட்டப்படி அபராதம் விதித்து வழக்கு தொடரப்படும் என மாநகராட்சி ஆணையர் பிரதாப் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.