வார்டு எண். 94-ல் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றம்; ரூ.5,000 அபராதம் விதித்த மாநகராட்சி அதிகாரிகள்..!

குறிச்சி பிரிவு பகுதியில்‌ கட்டிடம் ஒன்றில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பேனரை மாநகராட்சி ஆணையர் உத்தரவின் பேரில் அதிகாரிகள் அகற்றிவிட்டு, உரிமையாளருக்கு ரூ.5,000 அபராதமும் விதித்துள்ளனர்.


கோவை: கோவை மாநகராட்சி வார்டு எண்‌.94-க்கு உட்பட்ட பகுதியில்‌ அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பேனர்களை அகற்றிய அதிகாரிகள், உரிமையாளர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதித்துள்ளனர்.



கோவை மாநகராட்சி வார்டு எண்‌ 94-க்கு உட்பட்ட பொள்ளாச்சி பிரதான சாலை, குறிச்சி பிரிவு பகுதியில்‌ ஒரு கட்டிடத்தில்‌ அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பேனர்கள்‌ (Hoardings) வைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ உத்தரவின் பேரில், உதவி நகரமைப்பு அலுவலர்‌ சத்யா தலைமையிலான அதிகாரிகள், சம்பவ இடத்துக்கு சென்ற குறிப்பிட்ட விளம்பர பேனரை அகற்றினர்.



இதனையடுத்து, அனுமதியின்றி விளம்பர பேனரை வைத்த உரிமையாளருக்கு, ரூ.5,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டனர்.

மேலும்‌, கோவை மாநகராட்சியில்‌ வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்கள்‌ உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்றும், மீறினால்‌ அவர்கள்‌ மீது சட்டப்படி அபராதம்‌ விதித்து வழக்கு தொடரப்படும்‌ என மாநகராட்சி ஆணையர் பிரதாப்‌ அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...