கோவை அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தையை திருடிய பெண் - கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்த மருத்துவமனை காவலாளிகளுக்கு பாராட்டு..!

கோவை அரசு மருத்துவமனையில் பச்சிளம் ஆண் குழந்தையை கடத்திச் செல்ல முயன்ற ஆரோக்கிய மேரி என்ற பெண்ணை மருத்துவமனை காவலாளிகள் கையும் களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


கோவை: கோவை அரசு மருத்துவமனையில் பச்சிளம் ஆண் குழந்தையை திருடிச் செல்ல முயன்ற பெண்ணை காவலாளிகள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை அரசு மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டில் அன்னூரை சேர்ந்த பெண் ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் நேற்று மதியம் குழந்தையை தொட்டிலில் படுக்க விட்டு, அந்த பெண் வெளியே சென்ற போது, அங்கு வந்த பெண் ஒருவர் திடீரென்று அந்த பச்சிளம் ஆண் குழந்தையை தூக்கிக் கொண்டு வேகமாக வெளியே செல்ல முயன்றார்.

இதை பார்த்து சந்தேகம் அடைந்த காவலாளிகள், அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி விசாரித்த போது, அந்த பெண், மருத்துவர் குழந்தையை தூக்கி வர சொன்னதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.

இதனிடையே, வெளியே சென்ற குழந்தையின் தாய் திரும்பி வந்தபோது தொட்டிலில் குழந்தை இல்லாததால் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். மேலும், அங்கிருந்த மருத்துவ பணியாளர்களிடம் தனது குழந்தையை காணவில்லை என்று கூறியுள்ளார்.

இதையறிந்து, உஷாரான காவலாளிகள் உடனடியாக விரைந்து செயல்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தி பச்சிளம் குழந்தையை தூக்கி சென்ற பெண்ணை மடக்கி பிடித்தனர். பின்னர் பச்சிளம் குழந்தையை மீட்டு தாயிடம் ஒப்படைத்து விட்டு அந்த பெண்ணை பந்தய சாலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த பெண், கோவை உடையாம்பாளையத்தை சேர்ந்த ஆரோக்கியமேரி (32) என்பது தெரியவந்தது. பச்சிளம் குழந்தையை அரசு மருத்துவமனையில் இருந்து திருடிய பெண் மீது வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்தில், பொள்ளாச்சியில் பச்சிளம் குழந்தையை கடத்திய கேரள பெண்ணை போலீசார் கைது செய்த நிலையில், தற்போது கோவை அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தையை திருட நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...