கோவை பாதுகாப்பு குறித்து டுவிட்டரில் அவதூறு கருத்து - 2 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் சைபர் போலீசார் வழக்குப்பதிவு..!

மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தும் விதமாக, டுவிட்டரில் அவதூறு கருத்துகளை பதிவு செய்த இருவர் மீது கோவை சைபர் போலீசார் தாமாக முன் வந்து 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டத்தின் பாதுகாப்பு குறித்து டுவிட்டரில் அவதூறு கருத்துகளை பதிவு செய்த இருவர் மீது 3 பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் பாஜக, இந்து அமைப்பினர் வீடுகள், கார்கள்மீது எரிபொருள் வீசப்பட்ட சம்பவங்களால் கடந்த இரண்டு நாட்களாக பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இதனால், கோவை மாநகரம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது.

கடந்த 22, 23ஆம் தேதிகளுக்கு பிறகு எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடக்காமல், கோவை மீண்டும் வழக்கமான நிலைக்கு திரும்பி உள்ள நிலையில், மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படும் விதமாக தவறான கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை மாநகர ஆணையர் பாலகிருஷ்ணன் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில், கோவையின் பாதுகாப்பு குறித்தும், அரசு குறித்தும், இரண்டு பிரிவுகளிடையே விரோத்தை தூண்டும் வகையில், மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி பிரச்சனையை தூண்டும் வகையில் சமூக வலைத்தளமான டுவிட்டரில் இருவர் அவதூறு கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து, கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் தாமாக முன்வந்து, அவதூறு கருத்துகளை பதிவு செய்த covaibalu73, prasant61035623 ஆகிய டிவிட்டர் கணக்கு உரிமையாளர் மீது ஆபாசமாக பேசுதல், இணையத்தில் மிரட்டல் விடுத்தல், மற்றும் ஐடி act, ( 294(b), 507, 67 it act என 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த கணக்குகளின் உரிமையாளர்கள் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...