10 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து 12 கைதிகள் விடுதலை செய்யப்பட்ட நிலையில், கோவை மத்திய சிறை அதிகாரிகள் மகாத்மா காந்தியின் சுயசரிதையான "சத்திய சோதனை" புத்தகத்தை வழங்கி அனுப்பி வைத்தனர்.
கோவை: கோவை மத்திய சிறையில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து 12 கைதிகள் விடுதலை செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு அதிகாரிகள் மகாத்மா காந்தியின் "சத்திய சோதனை" புத்தகத்தை வழங்கினர்.
கோவை மத்திய சிறையில், பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில், நீதிமன்றத்தால் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, 10 ஆண்டுகள் சிறைவாசம் முடிந்த, 12 கைதிகள் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.
விடுதலை செய்யப்பட்டவர்களுக்கு மகாத்மா காந்தியின் சுயசரிதையான, "சத்திய சோதனை"புத்தகத்தை மத்திய சிறை அதிகாரிகள் வழங்கி, அவர்களது வாழ்வு சிறக்க வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.