தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர் குலைத்து திமுக ஆட்சியை கவிழ்க பாஜக முயற்சி - சி. பி.ஐ செயலாளர் முத்தரசன் குற்றச்சாட்டு.

எம்பி ஆ ராசா சனாதன குறித்து பேசியதை இந்து மதத்தை பற்றி பேசியதாக கலவரத்தை உண்டாக்க பார்க்கின்றனர். இந்த வன்முறையில் ஈடுபட்டவர்களை சிசிடிவி மூலம் அடையாளம் கண்டு கால தாமதம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.


கோவை: கோவை சிரியன் சர்ச் சாலையில் உள்ள ஜீவா இல்லத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ரா. முத்தரசன் இன்று செய்தியாளர்கள் சந்தித்தார்.



அப்போது பேசிய அவர், எம்பி ஆ ராசா சனாதன குறித்து பேசியதை இந்து மதத்தை பற்றி பேசியதாக கலவரத்தை உண்டாக்க பார்க்கின்றனர். மத்திய அரசின் சிபிஎஸ்இ ஆறாம் வகுப்பு பாட திட்டத்தில் சனாதன பற்றி மேல் ஜாதி, கீழ் சாதி என படத்தோடு உள்ளது.இ தற்கு மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.

பாடப்புத்தகத்திலிருந்து இதனை நீக்கவில்லை என்றால் இந்த பாட திட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் எரிக்க வேண்டிய சூழ்நிலை வரும்.

தமிழகத்தில் சட்ட ஒழுங்கை சீர்குலைத்து தற்போது உள்ள திமுக ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சித்து வருகிறது. கோவை உள்ளிட்ட இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடைபெற்ற அனைத்து இடத்திலும் சிசிடிவி காட்சிகளின் அடிபடையில் உண்மையை கண்டறிந்து ,எந்த அமைப்பை சேர்ந்தவர்கள் என்றாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, காலம் தாமதம் இல்லாமல் தமிழக காவல்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.



அண்ணாமலை வன்முறையை தூண்டும் கூடிய வகையில் பேசுகிறார்.இவரது பேச்சு சமூக விரோதிகளுக்கு ஊக்கமாளிப்பதாக உள்ளது

அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி நாளை முன்னிட்டு காந்தியை சுட்டிக் கொன்ற நபரின் அமைப்பை சேர்ந்தவர்கள் பேரணி நடத்த சென்னை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தேசிய பஞ்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கடந்த 3 மாதங்களாக சம்பளம் கொடுக்கப்படவில்லை. இதனை கவனத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...