நோயாளிகளிடம் கனிவாக பேச வேண்டும் - மருத்துவர்கள், செவிலியர்களுக்கு கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப் அறிவுரை

வார்டு12 மற்றும் 25 இல் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்க மாநகராட்சி ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். அப்போது, நகர்நல மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என்று மருத்துவ பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.


கோவை: மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு, வரும் நோயாளிகளிடம் கனிவாக பேசி, சிகிச்சையளிக்க வேண்டும் என மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பிரதாப் அறிவுறுத்தினார்.



கோவை மாநகராட்சியில் 25வது வார்டுக்கு உட்பட்ட கணபதி மாநகரில், ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கழிவறை கட்டுமான பணி,



21வது வார்டு விநாயகபுரம் பிரதான சாலையில், ரூ.2.90 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகள் மற்றும் 12-வது வார்டுக்கு உட்பட்ட சின்னவேடம்பட்டியில், 25 லட்சம் மதிப்பீட்டில் நகர்நல மையம் கட்டுமான பணிகளை, மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆய்வு செய்தார்.



அப்போது பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்க வேண்டும் என பணியாளர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து வெள்ளக்கிணறு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அவர், சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் கனிவாக பேசி, தரமான சிகிச்சை வழங்குமாறு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு அறிவுறுத்தினார்.



இதனையடுத்து வடக்கு மண்டலம், கே.என்.ஜி.புதுார் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் சுற்றுச்சுவர் கட்டுமான பணிகளை பார்வையிட்ட ஆணையர், மாணவ, மாணவியரிடம் வாசிப்பு திறனை மேம்படுத்த அறிவுறுத்தினார்.



இந்த ஆய்வு பணியில் போது உதவி ஆணையர் மோகன சுந்தரி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...