மின் கட்டண உயர்வுக்கு எதிரான வேலைநிறுத்தம் வாபஸ் - கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

மின் கட்டண உயர்வு குறித்து மின்சாரத்துறை அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்தையில் ஓரிரு நாளில் சாதகமான அறிவிப்பு வெளியாகும் என்ற நம்பிக்கை உள்ளதால் வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: மின் கட்டண உயர்வுக்கு எதிராக நடத்தி வந்த வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்று கொள்வதாக, கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியம் சமீபத்தில் புதிய மின் கட்டண உயர்வை அமலுக்கு கொண்டு வந்தது. இதற்கு தொழில் நிறுவனங்கள், நெசவாளர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்து வந்தன.

இந்நிலையில் மின்கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி, கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் கடந்த 16ஆம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் மின் கட்டண உயர்வு தொடர்பாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியுடன் நடந்த பேச்சுவார்தையில் ஓரிரு நாளில் சாதகமான அறிவிப்பு வெளியாகும் என்ற நம்பிக்கை உள்ளதால், ஒரு வாரத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளனர்.

வேலைநிறுத்த போராட்ட வாபஸ் பெறப்பட்ட நிலையில் நாளை முதல் விசைத்தறிகள் வழக்கம் போல் இயங்கும் என சங்கத்தினர் கூறியுள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...