திருப்பூரில் காலாவதியான விசாவில் தங்கியிருந்த 2 நைஜீரிய நாட்டை சேர்ந்தவர்கள் கைது.

திருப்பூர் வடக்கு போலீசார் ராயபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, நைஜீரிய நாட்டை சேர்ந்த இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், தொழில் நிமித்தமாக திருப்பூர் வந்தவர்கள், விசா காலாவதி ஆகியும் ராயபுரம் பகுதியில் தங்கி பின்னலாடை தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.


திருப்பூர்: விசா காலாவதி ஆகியும் திருப்பூரில் தங்கி இருந்த இரண்டு நைஜீரியா நாட்டை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் வடக்கு போலீசார் ராயபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த நைஜீரிய நாட்டை சேர்ந்த இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

இருவரையும் திருப்பூர் வடக்கு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் , தொழில் நிமித்தமாக திருப்பூர் வந்தவர்கள்,தற்போது ராயபுரம் பகுதியில் தங்கி பின்னலாடை தொழிலில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

இருவரும் வைத்திருந்தவிசா காலாவதியாகிய நிலையில், இருவரும் சட்ட விரோதமாக திருப்பூரில் தங்கி பனியன் தொழிலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, நைஜீரியா நாட்டை சேர்ந்த சிக்கா அஸ்டின், பிரோன்வு மோசஸ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...