திருப்பூரில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் வீட்டின் மீது கற்களை வீசித் தாக்குதல் - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு - பரபரப்பு..!

ராக்கியாபாளையம் அருகே ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் வீட்டின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய மர்ம நபர்களை, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு போலீசார், தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


திருப்பூர்: ராக்கியாபாளையம் அருகே ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் வீட்டின் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ராக்கியாபாளையம் அடுத்த ஜெய் நகர் பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவர் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தேகப்பிரிவு ஆசிரியராக பொறுப்பு வகித்து வருகிறார். ஜெய்நகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வரும் இவரது வீட்டின் விலாசத்தை கேட்டுக் கொண்டு 2 இருசக்கர வாகனங்களில் 4 பேர் அப்பகுதியில் சுற்றித் திரிந்துள்ளனர்.



இந்நிலையில் அங்கிருந்தவர்களிடம் பிரபுவின் வீட்டை கேட்டு உறுதி படுத்திக்கொண்ட மர்ம நபர்கள், தாங்கள் கொண்டு வந்த பையில் இருந்த கற்களை எடுத்து அவரது வீட்டில் ஜன்னல் கண்ணாடி மற்றும் காரின் மீது வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.



இதில் வீட்டின் ஜன்னல் கண்ணாடி மற்றும் காரின் பின்பக்கம் சேதமடைந்துள்ளன.



சத்தம் கேட்டு பிரபு வெளியே வந்து பார்த்தபோது மர்ம நபர்கள், இருசக்கர வாகனங்களில் தப்பிச் சென்றுள்ளனர்.



இதுகுறித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு, மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



இச்சம்பவம் குறித்த தகவல்கள் பரவிய நிலையில், ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தொண்டர்கள் அப்பகுதியில் கூடியதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...