பழனி மலைக்கோவிலில் உண்டியல் காணிக்கையாக பணமாக ரூ.1.89 கோடியும், 1,968 கிராம் தங்கம், 29,438 கிராம் வெள்ளியும், 2,406 வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக பெறப்பட்டுள்ளது என கோவில் நிர்வாகம் அறிவிப்பு.
திண்டுக்கல்: பழனி மலைக்கோவில் உண்டியல் காணிக்கையாக பணம், நகை மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் என மொத்தம் 2.71 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளதாக, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி மலைக்கோவிலில் உண்டியல் பெறப்பட்ட காணிக்கைகளை எண்ணும் பணி கடந்த செப்டம்பர் 21 ஆம் தேதி தொடங்கியது. தற்போது உண்டியல் என்னும் பணி முடிவடைந்த நிலையில் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
முதல் நாள் உண்டியல் எண்ணிக்கையில், ஒரு கோடியே 89 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் பணமாக கிடைத்துள்ளது. மேலும், 883 கிராம் தங்கமும், 13,997 கிராம் வெள்ளியும், 2,042 வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக கிடைத்துள்ளது என்றும் இரண்டாவது நாள் உண்டியல் எண்ணிக்கையில் 1085 கிராம் தங்கம், 15,441 கிராம் வெள்ளி ஆகியவை காணிக்கையாக கிடைத்துள்ளது என்று அறிவித்துள்ளது.
இதன்படி, கிடைக்கப்பெற்ற தங்கம், வெள்ளி, ரொக்கம் உள்ளிட்டவற்றின் மொத்த மதிப்பு 2 கோடியே 71 லட்சத்து 48 ஆயிரத்து 290 ரூபாய் ஆகும். மேலும், 2,406 வெளிநாட்டு கரன்சிகள் பெறப்பட்டுள்ளதாக அறிவித்திருக்கின்றனர்.
இந்த உண்டியல் எண்ணிக்கையில் இணை ஆணையர் நடராஜன், உட்பட அலுவலர்கள், பணியாளர்கள், ஊழியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து உண்டியல் என்னும் பணி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.