கூடலூர் அருகே மின்சாரம் தாக்கி ஆண் யானை உயிரிழந்த சோகம்...!

பிதுர்காடு பகுதியில் சுற்றிவந்த யானை ஒன்று, பாக்கு மரத்தை முறிக்க முயன்ற போது, மின் கம்பி அறுந்து விழுந்ததில், மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே யானை உடல் கருகி உயிரிழந்த நிலையில், அங்கு வந்த வனத்துறையினர், யானை உடலை மீட்டு உடற்கூராய்வு செய்து அடக்கம் செய்தனர்.


நீலகிரி: கூடலூர் அருகே பிதுர்காடு பகுதியில் மின் கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி ஆண் யானை ஒன்று உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கூடலூர் அருகே உள்ள பிதுர்காடு பகுதியில் நேற்றைய தினம் ஆண் யானை ஒன்று சுற்றித்திரிந்தது. வனப்பகுதியில் இருந்த மரங்களை முறித்து சாப்பிட்டு வந்த யானை, அங்கிருந்த பாக்கு மரத்தை தனது தலையால் மோதி சாய்க்க முயன்றது.

பாக்கு மரம் அங்கிருந்த மின் கம்பி மீது சாய்ந்த நிலையில் திடீரென மின் கம்பி அறுந்து எதிர்பாராத விதமாக யானை மீதே விழுந்தது. இதில் மின்சாரம் தாக்கி அந்த இடத்திலேயே யானை உடல் கருகி உயிரிழந்தது.

இந்நிலையில், இன்று காலை அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் யானை இறந்து கிடப்பது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறை அதிகாரிகள், யானையின் உடலை மீட்டு, அந்த இடத்திலேயே உடல் கூராய்வு செய்தனர். பின்னர் யானையின் உடலை அடக்கம் செய்தனர்.

சம்பவம் நடைபெற்ற குறிப்பிட்ட பகுதியில் மின்சாரம் தாக்கி யானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்நிலையில், மின்சார தாக்குதலில் இருந்து வன விலங்குகளை காப்பதற்காக கடந்த வாரம் வனத்துறையினரும், மின்சாரத் துறையினரும் இணைந்து ஆய்வுப்பணி மேற்கொண்ட நிலையில் அங்கு மேலும் ஒரு யானை உயிரிழந்தது வனத்துறையினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...