வால்பாறையில் பணிகள் நிறைவடைவதற்கு முன்பே திறக்கப்பட்ட தாவரவியல் பூங்கா, பணிகள் நிறைவடைந்த நிலையில் 2வது முறையாக இன்று, வால்பாறை நகராட்சி தலைவர் அழகு சுந்தரவல்லி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
கோவை: வால்பாறையில் 2வது முறையாக திறக்கப்பட்டுள்ள தாவரவியல் பூங்காவில் இன்று முதல் பொதுமக்களுக்கு இலவசமாக அனுமதி வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறையில் தாவரவியல் பூங்கா அமைக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. இந்த நிலையில், கடந்த ஆட்சியில் தாவரவியல் பூங்கா அமைப்பதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட 4.2 ஏக்கர் இடத்தில், பொதுப்பணித் துறை சார்பில், ரூ.5 கோடி மதிப்பில் தாவரவியல் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் துவக்கப்பட்டன. இந்நிலையில், பணிகள் நிறைவு பெற்று ஒரு சில வேலைகள் செய்து முடிப்பதற்கு முன்பே பூங்கா திறக்கப்பட்டது.
இந்த பூங்காவில் ஒரு சில நாட்கள் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், ஆட்சி மாற்றத்தின் காரணமாகவும், பணி நிறைவடையாமல் இருந்ததன் காரணமாகவும் பூங்கா அப்போது மூடப்பட்டது.
தற்போது, பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், தாவரவியல் பூங்கா 2வது முறையாக இன்று மீண்டும் திறக்கப்பட்டது.

பூங்காவை வால்பாறை நகராட்சி தலைவர் அழகு சுந்தரவல்லி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இந்நிலையில், இன்று முதல் பொதுமக்களுக்கு இலவசமாக அனுமதி வழங்கப்படும் என நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் நகராட்சி ஆணையாளர் பாலு, நகராட்சி எம்.இ.வெங்கடாசலம் மற்றும் வால்பாறை பகுதியில் உள்ள வார்டு உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.