படுக்கையை மாற்றச் சொன்ன விவகாரம்: கோவை அரசு பெண் மருத்துவரை தாக்கிய நோயாளி - போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை..!

கோவை அரசு மருத்துவமனையில் படுக்கையை மாற்றிக் கொள்ளும்படி கேட்ட பெண் மருத்துவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நோயாளி சந்தோஷ்குமார், மருத்துவரை தாக்க முயன்றதுடன் தடுக்க வந்த செவிலியரை தாக்கிவிட்டு, நோட்டீஸ் போர்டையும் உடைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நோயாளி ஒருவர் மருத்துவர் மற்றும் செலவிலியரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி வருபவர் ஸ்ரீவித்யா. இவர் கடந்த 20ஆம் தேதி பகல் 3:30 மணிக்கு மருத்துவமனையில் பணியில் இருந்துள்ளார். அப்போது அங்கு சிகிச்சைக்கு வந்த சென்னை கொடுங்கையூரை சேர்ந்த ஓட்டுனர் சந்தோஷ் குமார்(26) என்பவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரிடம் மருத்துவர் ஸ்ரீவித்யா, படுக்கையை மாற்றிக் கொள்ளும்படி தெரிவித்துள்ளார். இதனால் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சந்தோஷ்குமார், தாக்கவும் முயற்சித்துள்ளார். அப்போது, தடுக்க முயன்ற செவிலியர் தனலட்சுமியை கடுமையாக தாக்கிய அவர், பொது அறுவை சிகிச்சை வார்டில் இருந்த நோட்டீஸ் போர்டையும் உடைத்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மருத்துவர் ஸ்ரீவித்யா, ரேஸ்கோர்ஸ் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில், ஆய்வாளர் சாந்தமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணரை நோயாளி ஒருவர் தாக்கிய சம்பவம் மருத்துவமனை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...