கோவை துடியலூரில் சோகம்..! குளிக்க சென்ற போது தாய் - மகள் இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்து பலி..!

கோவை துடியலூர் ஜி.என் மில்ஸ் அருகே உள்ள மீனாட்சி கார்டன் பகுதியில் தாயும் - மகளும் வசித்து வந்துள்ளனர். கல்லூரிக்கு செல்ல மாணவி குளிக்க சென்ற போது மாணவி மீது மின்சாரம் பாய்ந்த நிலையில், அவரை காப்பாற்ற சென்ற தாய் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் இருவரும் உயிரிழந்தனர்.


கோவை: கோவை துடியலூர் ஜி.என் மில்ஸ் அருகே உள்ள மீனாட்சி கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த்.

இவர் திருச்சியில் உள்ள ஆர்.டி.ஓ அலுவலகத்தில் ஜூனியர் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கிருத்திகா (52) மகள் அர்ச்சனா (18) இவர் தனியார் கல்லூரியில் பயோ டெக் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

கிருத்திகாவும், அர்ச்சனாவும் நேற்று காலை வீட்டில் இருந்துள்ளனர். அப்போது, அர்ச்சனா கல்லூரிக்குச் செல்ல குளிப்பதற்காக குளியல் அறைக்கு சென்று உள்ளார். அங்கு தண்ணீரை சூடு செய்ய ஹீட்டரை போட்டதாக தெரிகிறது. அப்போது எதிர்பாராத விதமாக அர்ச்சனா மீது மின்சாரம் பாய்ந்துள்ளது.

இதனால் அவரது அலறல் சத்தம் கேட்டு உள்ளே சென்ற கிருத்திகா மகளை காப்பாற்ற முயன்ற போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில், இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில், அவரது வீட்டின் அருகே அர்ச்சனாவை அழைத்துச் செல்ல வரும் கல்லூரி பேருந்து வந்து நீண்ட நேரமாக காத்திருந்துள்ளது. ஆனால், வீட்டில் இருந்து யாரும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த ஓட்டுநர் உள்ளே சென்று பார்த்தார்.

அப்போது, கிருத்திகா மற்றும் அர்ச்சனா இருவரும் மின்சாரம் பாய்ந்து இறந்து கிடந்தது தெரியவந்தது. இதை அடுத்து அவர் போலீசுக்கு தகவல் அளித்தார். விரைந்து வந்த போலீசார் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரிக்கு கிளம்ப குளிக்க சென்ற போது ஹீட்டர் மூலம் மின்சாரம் பாய்ந்து தாய் மகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...