பந்தலூர் சரகத்தில் உள்ள கிளாண்ட் ராக் வனப்பகுதியில் பரிதவித்து வந்த குட்டியானையின் பிளறல் சத்தம் கேட்டு வனப்பகுதியில் இருந்து வந்த தாய் யானை மற்றும் சக யானைகள் குட்டியை மீண்டும் வனப்பகுதிக்குள் அழைத்து சென்றன.
நீலகிரி: நீலகிரி மாவட்ட வன பகுதிகளில் யானை அதிக அளவில் கூட்டமாக வாழும் இடங்களில் ஒன்று கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதி. அதிக வனப்பரப்பு இருப்பதால் யானை, காட்டெருமை, புலி, சிறுத்தை, கரடி போன்ற வனவிலங்குகள் அதிக அளவில் வாழ்விடமாக இது திகழ்கின்றன தற்பொழுது இந்த வன பகுதிக்கு ஏராளமான யானை கூட்டங்கள் குட்டிகளுடன் உலா வருகின்றன.
இந்நிலையில் பந்தலூர் சரகத்தில் உள்ள கிளாண்ட் ராக் வனப்பகுதியை ஒட்டி வாழ்ந்து வரும் பழங்குடியினர், யானை குட்டி ஒன்று நடக்க முடியாமல் படுத்திருப்பதை பார்த்துள்ளனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் பிறந்து சுமார் 3 மாதங்களே ஆன ஆண் குட்டி யானையை மீட்டனர்.
பின்னர் வனப்பகுதி முழுவதும் குழுக்கள் அமைத்து அந்த குட்டி யானையின் தாய் யானையை தீவிரமாக தேடினர். இந்த நிலையில் குட்டி யானை மிகவும் சோர்வாக காணபட்டதால் தண்ணீர் மற்றும் பால் கொடுத்தனர். இதனால், குட்டி யானை எழுந்து நின்றது.
இதனிடையே, நீண்ட நேரத்திற்குப் பிறகு குட்டியின் பிளறல் சத்தம் கேட்டு வனப்பகுதியில் இருந்து வந்த தாய் யானை மற்றும் சக யானைகள் குட்டியை மீண்டும் வனப்பகுதிக்குள் அழைத்து சென்றன. வனத்துறையினரும் அவற்றை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
பரிதவித்த குட்டி யானையை பாசத்துடன் அரவனைத்து தாயுடன் சேர்த்த வைத்த வனத்துறையினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.