கோவை மாவட்டத்தில் பழங்குடி இனத்தில் முதல் வழக்கறிஞர் பட்டம் பெற்ற மாணவி..! நீதிபதியாகி மலைவாழ் மக்களுக்கு உதவுவதே லட்சியம்

கோவை மாவட்டத்தில் பழங்குடி இனத்தில் முதல் வழக்கறிஞராக பட்டம் பெற்ற காளியம்மாள், தான் நீதிபதியாக தேர்வு பெற்று பழங்குடியின மக்களுக்கு முடிந்த உதவிகளை செய்வதே லட்சியம் என தெரிவித்துள்ளார்.


கோவை: நீதிபதியாக தேர்வு பெற்று பழங்குடியின மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்வதே தனது லட்சியம் என கோவை மாவட்டத்தில் பழங்குடி இனத்தில் முதல் வழக்கறிஞர் பட்டம் பெற்ற மாணவி காளியம்மாள் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் காரமடை அடுத்த தோலம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கோப்பனாரி கிராமத்தில் ஏராளமான மலைவாழ் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தை சேர்ந்த மருதன் - ஆண்டிச்சி தம்பதியின் மகள் காளியம்மாள்(30). இவர் கோவை மாவட்டத்தில் பழங்குடி இனத்தில் முதல் வழக்கறிஞர் பட்டத்தை பெற்றுள்ளார்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் வழக்கறிஞர் காளியம்மாள் பேசியதாவது, கோப்பனாரி மலைவாழ் கிராமத்தில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள குழந்தைகள் சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள துவக்கப் பள்ளிக்கு சென்று வருகின்றனர். அவர்கள் உயர்கல்வி பயில ஆனைகட்டி அல்லது தோலம்பாளையம் செல்ல வேண்டும். இப்பகுதியில் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கு அனுப்புவதில்லை.

நான் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை கோப்பனாரி அரசு துவக்கப் பள்ளியிலும், 6-10 வரை வரை ஆனைகட்டி அரசு பள்ளியிலும் படித்தேன். நான் எட்டாவது படிக்கும் போது எங்கள் கிராமத்துக்கு வந்த வழக்கறிஞர் ஒருவரை பார்த்து தான், வழக்கறிஞருக்கு படிக்கும் ஆர்வம் ஏற்பட்டது. கோவை அரசு கலை கல்லுாரியில் பி.ஏ.,பொருளாதாரம் படித்து பட்டம் பெற்றேன். பின்னர் எல்.எல்.பி., படிக்க விண்ணப்பித்தேன்.

முதல் இரண்டு ஆண்டுகள் மதுரை சட்டக்கல்லுாரியில் படித்தேன். எனது தந்தையின் உடல் நலம் பாதித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதால், வழக்கறிஞர் படிப்பு தடைபடும் நிலை ஏற்பட்டது. பலரின் உதவியோடு கோவை அரசு சட்டக் கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு படித்து, கடந்த, ஆகஸ்டு 30ஆம் தேதி, எல்.எல்.பி., பட்டம் பெற்றேன்.

பள்ளி, கல்லுாரி விடுமுறை நாட்களில் ஆடு மேய்த்தும், விவசாய கூலி வேலைக்கு சென்றும், அதில் கிடைக்கும் வருவாயை வைத்தும் படித்தேன். மாலையில் எங்கள் கிராம குழந்தைகளுக்கு பாடம் பயிற்று விப்பேன்.

நீதிபதிகளுக்கான தேர்வு எழுத திட்டமிட்டுள்ளேன். நீதிபதியாக தேர்வாகி மலைவாழ் மக்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வதே எனது லட்சியம்.

இவ்வாறு வழக்கறிஞர் காளியம்மாள் கூறினார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...