பல்லடத்தில் அரசு கல்லூரி முதல் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு இடையே மோதல்: தாக்கிக் கொள்ளும் காட்சிகள் வைரல்..!

நேற்று மாலை பல்லடம் பேருந்து நிலையத்திற்கு பின்புறம் உள்ள காய்கறி மார்க்கெட் அருகே இரு தரப்பு மாணவர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதனைக் கண்ட பொதுமக்கள் அங்கிருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.


திருப்பூர்: பல்லடம் அரசு கல்லூரி, முதல் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் பேருந்து நிலையம் பின்புறம் தாக்கி கொண்ட சிசிடிவி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் இரண்டு கோஷ்டியாக பிரிந்து அவ்வப்பொழுது சண்டையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று மாலை பல்லடம் பேருந்து நிலையத்திற்கு பின்புறம் உள்ள காய்கறி மார்க்கெட் அருகே இரு தரப்பு மாணவர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதனைக் கண்ட பொதுமக்கள் அங்கிருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

இப்பகுதியில், மாணவர்கள் தொடர்ந்து ராகிங் மற்றும் மோதலில் ஈடுபட்டு வருவதால், போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும்எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்ளும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...